சாதனை(1)

மலர்களின் மார்புமேல்
ஓடிவந்த தேரிலிருந்து
ஒப்பிலாத் தரைவர்
இறங்கினார்…

உதட்டுக் காட்டிலே
கிள்ளி யெடுத்த
பன்னூறு மின்னலால்
தலையைத் தாங்கத்
திணறும்
தலைசர் கழுத்தில்
மாலையிட்டனர்

கண்களின் அரண்டு
கரங்களும் கலந்தே
ஊமைச் சத்தங்கள்
உற்பத்தி செய்தன
அந்த
நிசப்த அலைகளின்
நம்பிக்கை ‘நாளைகள்’

மலராத ‘இன்றுகள்’
திரவாகக் களிப்புச்
செய்து கொண்டன.

About The Author