சாதனை(2)

தலைவர் நமது
உரையைத் தொடங்கினார்
இருமல்… இருமல்…
இடைவிடா இருமல்…
தண்ணீர் தந்தனர்
தந்தனர் மோர் பால்

கதவு திறந்த
கண்ணாடிப் புட்டிகள்
நிவேதனமாக
நீட்டபடபட்டன…
எனினும்
இருமல்…இருமல்
இடைவிடா இருமல்…
செயலர் சிந்தனைக்குச்
சிறகு முளைத்தது…

கொண்டைக் கொடியின்
சதைமலர் இரண்டைத்
திருகிப் பிழிந்த
சாறு கொணர்ந்தார்…

சீறிய இருமல்
சிறிது தணிந்ததும்
தலைவரின் உதடுகளைத்
தட்டித் திறந்தன
சொற்கள்.

‘அகிம்சை வாழ்வில்
அவசியம்… அதனால்
சமாதான வாழ்வு
சாத்தியம் உலகிலே…
சாதிக்கலாம் வாரீர்!
வாரீரோ!’

About The Author