சாபமே சாபல்யமே

இளஞ் சிவப்பையும்
மாலை மஞ்சளையும்
இளநீரில் குழைத்தது
போல ஒரு நிறம்

வானம் வகை வகையாக
வரிகளைப் போட்டுவிட
மூச்சு வாங்க
வெளியே சென்ற நேரத்தில்
மேகம் கொஞ்சம்
கருப்பு சாயம்
கொட்டிவிட
அடர்ந்த புருவம்

பலரின் ஏக்கப்
பெருமூச்சினை
ஆக்சிஜனாக உள்வாங்கி
கேலிப் பெருமூச்சினை
வெளிவிடும்
நடுநிசியான நாசி …..

மாதுளை
செர்ரி
பீட் ரூட்
மூன்றுமே
சிகப்பு நிறம் பெற்றது
உன் உதடு
கடித்த பின் தான்
கழுத்து
வலம்புரி வணிகர்களால்
செதுக்கபட்டது

கழுத்தில் பிறந்த
கங்கை
இடையைச் சேரும் முன்னே
இளைப்பாற சாமரம் வீசும்
இரண்டு இளவரசிகள் ..

ஐயோ!
இத்துணை அழகா நான்!
இவை எல்லாமே
சாபம்தான்!
நீ என் நண்பனாகவே இருக்கும் வரை ……!

About The Author