சிட்டுக் குருவியே!

சின்ன சிட்டுக் குருவியே!
சிறக டிக்கும் குருவியே!
மின்ன லாகப் பறக்கவும்
மேலும் கீழும் செல்லவும்
உன்னைப் பழக்கி விட்டதார்?
உண்மை சொல்ல வேண்டுமே!
என்னைக் கூட உன்னைப்போல்
எளிதில் பறக்கச் செய்வரா?

About The Author