சிரிக்கத் தெரிந்த மனமே!

"ஏங்க, நீங்க ஏலக்கடையிலா வேலை செய்யறீங்க?"

"ஆமாம், ஆமாம், ஆமாம்."

*****

"லோன் வாங்கி உங்க பையனை படிக்க வச்சீங்களே, இப்ப எப்படி படிக்கிறான்?"

"ஏதோ கடனேன்னு படிக்கிறான்!"

*****

"வைர வியாபாரம் செய்துக்கிட்டு இருந்தீங்களே, இப்போ எப்படி இருக்கு?"

"எல்லாமே தலைகீழாப் போச்சு, இப்போ ரவை வியாபாரம் பண்றேன்."

*****

ஜோஸ்யர் : "ஐயா, உங்களுக்கு தூங்கும் போது ஒரு கண்டம் இருக்கிறது."

அவர் : "வீட்டிலா? ஆபீசிலா?"

*****

"சினிமா நடிகையானா வாழ்க்கை ‘கிளு கிளு’ன்னு இருக்கும்னு சொன்னியே இப்போ எப்படி இருக்கு?"

"போடி, ஒரே கிசு கிசுன்னு இருக்கு."

*****

"நாங்க ஒரு புது மாதிரியான நாடகம் போடப்போறோம். சீன், செட்டிங் எதுவுமே கிடையாது."

"அட, அப்போ எங்கே ஓடி ஒளிஞ்சுப்பீங்க?"

*****

About The Author