சிரிக்க… சிரிக்க… – 1

நண்பன் 1: டேய் மச்சான்! எந்த மாசத்துல கல்யாணம் செய்துக்கிறது நல்லது?
நண்பன் 2: அக்டம்பவரி
நண்பன் 1: போடா, அப்படி ஒரு மாசமே கிடையாது.
நண்பன் 2: அதையேதான் நானும் சொல்றேன்.

*******************

ஆஸ்பத்திரியிலிருக்கும் மனைவி கணவனிடம்,

மனைவி: நான் செத்துப் போனா நீங்க என்ன செய்வீங்க?
கணவன்: நானும் செத்துப் போயிடுவேன்.
மனைவி: என் மேல உங்களுக்கு அவ்வளவு அன்பா?
கணவன்: அதெல்லாம் தெரியாது. ஆனால் பெரிய பெரிய சந்தோஷங்களை தாங்கிக்கிற சக்தி என்னுடைய இதயத்துக்கு இல்லைன்னு மட்டும் தெரியும்!

********************

நபர் 1: என்னுடைய துணிகளை நானே துவைச்சு, நானே சமைச்சு, நானே சாப்பிட்டு, வாழ்க்கையே ரொம்ப போரடிக்குதுப்பா. பேசாம கல்யாணம் செய்துக்கலாம்னு முடிவெடுத்திருக்கேன்.
நபர் 2: ஆச்சர்யமாயிருக்கே! இதே காரணங்களுக்காகவே நான் என்னுடைய மனைவியை விவாகரத்து செய்யலாம்னு முடிவெடுத்திருக்கேன்.

********************

வீட்டிற்குள் நுழைந்து திருட முற்பட்ட திருடனிடம்,

கணவன்: இந்த வீட்டுல இருந்து என்ன வேணும்னாலும் எடுத்துக்கோ. அதுக்குப் பதிலா ‘சத்தம் போடாம வீட்டிற்குள் நுழையும் ரகசியத்தை’ எனக்கு சொல்லித் தரணும். என்ன டீல் ஓகேவா?

*******************

மனைவியை இழந்த கணவனிடம்,

நண்பன் : துக்கத்தை உனக்குள்ளேயே அடக்கி வைச்சுக்காதே. மனசு விட்டு அழுதிடு.
கணவன்: நானும் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்துட்டேன், அழுகையே வர மாட்டேங்குதுடா.
நண்பன்: கவலைப்படாதே! உன்னுடைய மனைவி திரும்பவும் உயிருடன் வந்துட்டதா நினைச்சுக்கோ, அழுகை தன்னாலே வந்துடும்.

*********************

About The Author

3 Comments

  1. RAJAMALAR L.RAMAYAH

    வணக்கம் நானும் என் படைப்புகளை அனுப்ப விரும்புகிறேன். விரைவில் அனுப்புவேன் இராஜமலர் இராமையா, மலேசியா

  2. prabha

    வெரி நிcஎ கமடி சுபெர் சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது சூப்பர்

Comments are closed.