சிரிக்க… சிரிக்க… – 2

மனைவியின் இறுதிச் சடங்குகளை முடித்த சிறிது நேரத்திலேயே இடியுடன் கூடிய மழை பெய்வதைக் கண்டு,

கணவன்: மேலோகம் போய் சேர்ந்த உடனே என்னுடைய மனைவி தன்னுடைய வேலையை ஆரம்பிச்சுட்டான்னு நினைக்கிறேன்.

*********************

தன்னுடைய மடியில் படுத்திருக்கும் கணவனிடம்,

மனைவி: இப்போ உங்களுக்கு எப்படியிருக்கு?

கணவன்: பாற்கடல்ல மஹாவிஷ்ணு பாம்பு படுக்கையில படுத்திருக்கிற மாதிரி இருக்கு!

**********************

மனைவி: நான் பேசறது எதையுமே கேட்க மாட்டேங்கிறீங்க. இந்தக் காதுல வாங்கி அந்தக் காதுல விட்டுடறீங்க. ஏன் இப்படி இருக்கீங்க?

கணவன்: நீ கூடத்தான் நான் சொல்றது எல்லாத்தையும் இரண்டு காதுலேயும் வாங்கிட்டு வாய் வழியா விட்டுடறே. நீ ஏன் இப்படி இருக்கேன்னு நான் என்னைக்காவது கேட்டிருக்கேனா?

***********************

கணவன்: எனக்குன்னு யாருமே எதுவுமே செய்யலை. நான் இன்னைக்கு இந்த நிலைமையில் இருக்கேன்னா அதுக்கு நான் மட்டும்தான் காரணம்.

மனைவி: இதை முன்னாடியே சொல்லியிருக்கக்கூடாது? இவ்வளவு நாளும் அநாவசியமா நான் கடவுளைத் திட்டிட்டிருந்தேன்.

*********************

மனைவி: நீங்க எவ்வளவு குண்டாகிட்டீங்க தெரியுமா?

கணவன்: நீ கூடத்தான் குண்டாகிட்ட.

மனைவி: நான் அம்மாவாகப் போறேன். அதனாலதான் குண்டாயிருக்கேன்.

கணவன்: நான் அப்பாவாகப் போறேன். அதனாலதான் நானும் குண்டாகியிருக்கேன்.

********************

About The Author