சிரிக்க… சிரிக்க.. (5)

ஒரு சின்ன சண்டைக்கப்புறம்,

மனைவி: உங்களைப் போய் நான் கல்யாணம் செய்துக்கிட்டேனே, நான் ஒரு முட்டாள்!

கணவன்: காதலுக்கு கண்ணில்லேன்னு சொல்லுவாங்க. அதனால எனக்கும் அது தெரியாமப் போச்சு.

******

மனைவி: உங்க கிரெடிட் கார்ட் திருடு போனதுக்கு நீங்க ஏன் புகாரே செய்யலை?

கணவன்: திருடன் உன்னை விட கம்மியாதான் செலவு செய்யறான். அதனாலதான்

******

நபர் 1: என்னுடைய மனைவிக்கு ஆபரேஷன் நடக்கும்போது இரண்டு தடவை மயக்க மருந்து குடுத்தாங்களாம்.

நபர் 2: எதுக்கு?

நபர் 1: முதல் முறை ஆபரேஷன் செய்யறதுக்காகவும், அடுத்த முறை ஆபரேஷன் பத்தியே பேசிட்டிருந்ததை நிறுத்துவதற்காகவும்!!

*******

மனைவி: நாம அந்த மலை மேலே ஏறினதுக்கப்புறம் நீங்க என்ன செய்வீங்க.

கணவன்: பெருசா எதுவுமில்லை. உன்னை லேசா தள்ளிவிடுவேன்.

*******

About The Author