சிரிக்க மட்டும்

மனைவி: நம்ம பையன் என்னவாக வரணும்னு ஆசைப்படுறீங்க?

கணவன்: அவன் என்ன வேணும்னாலும் ஆகட்டும்…ஆனா யாருக்கும் புருஷனா மட்டும் ஆகக்கூடாது… நான் பட்ட கஷ்டம் என்னோட போகட்டும்…!!

*******

மனைவி: ஏங்க.. சமையல்காரியை நிறுத்திட்டு இனிமே நானே சமைக்கிறேன்… எனக்கு மாசம் எவ்வளவு சம்பளம் கொடுப்பீங்க?

கணவன்: உனக்கு எதுக்கும்மா சம்பளம்…? நீ சமைக்க ஆரம்பிச்சுட்டேனா என் இன்சூரன்ஸ் பணம் மொத்தமும் உனக்குத்தானே…!

*******

மனைவி: என்னங்க.. அதோ அங்க உக்காந்து தண்ணியடிக்கிறாரே.. அவரு ஒரு தடவை என்னை பொண்ணு பார்க்க வந்திருந்தாரு. நான் அவரை கல்யாணம் பண்ணமாட்டேன்னு சொன்னதினால அதை நினைச்சே இத்தனை வருஷமா தண்ணியடிக்கிறாராம்.

கணவன்: அடப்பாவி…! அந்த சந்தோஷத்தை இத்தனை வருஷமாவா கொண்டாடிக்கிட்டிருக்கான்..?

*******

மனைவி: என்னங்க.. நான் செத்துப்போயிட்டா… என்ன பண்ணுவீங்க?

கணவன்: எனக்கு பைத்தியமே புடிச்சுரும்.

மனைவி: நான் செத்தா இன்னொரு கல்யாணம் பண்ணுவீங்களா?

கணவன்: பைத்தியம் என்ன வேணும்னாலும் பண்ணும்!!

*******

About The Author

11 Comments

  1. Dr. Subramanian

    பைத்தியம் ஜோக் நன்றாக இருக்கிறது. இந்தப் பைத்தியம் உண்மையே பேசுகிறது.

Comments are closed.