சில்லுனு ஒரு அரட்டை

ஹூம்… என்ன ஒரு மண்வாசனை..! மழையா பெய்ய ஆரம்பிச்சுடுறதுக்குள்ளே முடிந்த வரை இதை அனுபவிச்சுடனும். அப்போதான் மழையையும் ரசிக்க முடியும். என்ன செய்யறது..? மழையும் வேண்டியிருக்கு, மண்வாசனையும் பிடிச்சிருக்கு. ஆஹா… மண்வாசனை மற்றும் மழையை ரசிக்கிறதுல நம்ம வாசகர்களுக்கு ஹல்லோ சொல்றது விட்டுப்போச்சே… பரவாயில்ல இப்போ சொல்லிடறேன்.

ஹலோ everybody,

Mike Testing 1 2 3…

எல்லோரும் எப்பவும் போல நலமா இருக்கீங்கதானே?

வாழ்த்து சொன்ன ஹரி, கலையரசி, கீதா, ஜனனி மற்ற எல்லோருக்கும் என்னுடைய நன்றி. அரசியல் இழையோட அழகான கவிதை சொல்லி கலக்கிட்டீங்களே மாலீக். குமார் சார் பின்னூட்டம் படிச்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன். 10 வருஷத்திற்கும் மேலா அப்படியே பழகினதால வந்த பிரச்னை இது. நிலாச்சாரல்ல எழுதறப்போ மட்டும் இப்படி இல்லை, பேசும் போதும் இதே மாதிரிதான் தமிழ், ஆங்கிலம் எல்லாம் கலந்து கட்டி வரும். சில சமயம் தெலுங்கு, கன்னடம் (இப்போ ஒரு வருஷமா) மலையாளம் (காரணம் புரிஞ்சிருக்கனமே!) எல்லாம் கலந்து பேசறேன். நம்ப வாசகர்களை அந்த அளவு கொடுமைப்படுத்த வேண்டாமேன்னு விட்டுவெச்சிருக்கேன். (ரொம்பவே இளகின மனசு எனக்கு, தெரியுமோ?)

எனக்கு ஒரு SMS வந்தது. அதை உங்களுக்கும் சொல்றேன். (யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.) ஒரு அரக்கன் அரக்கியோட கோவிலுக்கு கிளம்பினானாம். ஆனா அவனால கோவிலுக்குள்ளே போக முடியலியாம். அது ஏன்? Thinkங்க.. Thinkங்க.. தெரியலேன்னா அரட்டை முடியும்போது அது ஏன்னு சொல்றேன்.

போன வாரம் Lotus Blind Ashram பத்தி சொல்லி இருந்தேன் இல்லையா? அங்க இருக்கும் பார்வை இல்லாத பெண்களுக்கு Braille books சிலது தேவைப்பட்டதா நிலா சொல்லி இருந்தாங்க. இந்தியாவில் Braille books எங்கே கிடைக்கும், என்ன மாதிரியான உதவிகள் கிடைக்கும்னு விவரம் சேகரிக்க தொடங்கினேன். அப்போ தான் நம்ம நண்பர் ஹரிகிட்ட பேசற வாய்ப்பு எனக்கு கிடைச்சுது. ஒரு விவரம் கேட்க போய் ஒன்பது விவரம் தெரிஞ்சுக்கிட்டேன். (அவர் இன்னும் பலதும் சொன்னாரு எனக்குதான் நியாபகம் இல்லை. ஏன்னா நான்தான் அவர் லிஸ்ட் ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துலேயே மயக்கம் போட்டுட்டேனே!) இவரும் இவருடைய நண்பர்களும் 10 வருடங்களுக்கு மேலே பலருக்கும் பல்வேறுவிதமான உதவிகள் செஞ்சுட்டு வாராங்க. சின்ன சின்ன உதவிகளா ஆரம்பிச்சு இப்போ எல்லாவிதமான உதவிகள் செய்ய காத்திருக்காங்க. ஆனா அதுக்கு அவர் சொல்லும் ஒரே condition அது ஒரு உண்மையான நிறுவனமா இருக்கணும்ங்கறது மட்டுமே. அதையும் அவங்களே நேர்ல போய் தெரிஞ்சுக்கறாங்க. நிறுவனம் உண்மையா இருக்கும் பட்சத்துல, அவங்களுடைய தேவைகள் அறிஞ்சு அதை நிறைவேற்ற தொடங்கறாங்க. முக்கியமான விஷயம் அவங்களுடைய அமைப்பின் பெயர் சொல்ல மறந்துட்டேன் பாருங்க. அமைப்பின் பெயர் ‘The Origin’. இவங்க அமைப்பின் 2011ஆம் ஆண்டின் மாத நிகழ்ச்சியை போன வாரம் சென்னை ஆவடியில் உள்ள ‘சரணாலய’த்துல நடத்தியிருக்காங்க. ஆதரவற்ற குழந்தைகளுக்கான புகலிடம்தான் இந்த ‘சரணாலயம்’. அங்கே இருக்கும் பாக்யா திருக்குறளில் இருக்கும் 1330 குறளையும் எந்தவித தடுமாற்றமும் இல்லாம சொல்லுவாளாம். அப்புறம் தனுஷாங்கற ஒரு பொடுசு (நிஜமாவே ரொம்பவும் சின்ன பெண்) 50 குறள்கள் சொல்றாளாம். அன்னைக்கு சரணாலயத்திலுள்ள குழந்தைகளுக்கு பள்ளி சீருடை வழங்கியது மட்டுமில்லாம அங்கிருக்கும் குழந்தைகளுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் கொடுத்திருக்காங்க.

மயிரிழையில் தப்பிக்கறதுன்னு நாம அடிக்கடி சொல்றதுண்டு. நம்ப இந்தியாவை சேர்ந்த சுகன்யாவிற்கு அது நிஜமாகியிருக்கு. எப்படி தெரியுமா? ஜூன் மாதம் மேரிலாண்ட் அதாகப்பட்டது Marylandல் (இது மாதிரியெல்லாம் தமிழை கஷ்ட்டப்படுத்த வேண்டாமேன்னு தான் English வார்த்தைகள் use பண்றேன்) நடந்த ‘Scripps National Spelling Bee’ இறுதி போட்டியை ESPNல உயிருடன் (அதாங்க Live) telecast செய்தாங்க. நிறைய இந்திய சிறுவர், சிறுமியர்கள் அதில் கலந்துக்கிட்டாங்க. 3 நாட்கள நடந்த இந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டி மட்டும் 2 மணி நேரம் நடந்துது. ‘Cymotrichous’ங்கற வார்த்தையை சரியான விதத்தில் உச்சரிச்சு, trophyயுடன் $40,000 பரிசையும் தட்டிட்டு போயிட்டாளாம் சுகன்யா ராய். எல்லாம் சரி நான் ஆரம்பத்துல சொன்னதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்னு யோசிக்கிறீங்களா? ‘Cymotrichous’ங்கற வார்த்தையின் அர்த்தம் ‘அலை போன்ற கூந்தல்’. இப்போ சொல்லுங்க சம்பந்தம் இருக்கா? இல்லையா?

http://search.japantimes.co.jp/cgi-bin/nn20110604a6.html

என்ன ஆச்சு யஷ்ஷுக்கு? காய்கறி பையோட நிலாச்சாரலுக்கு வந்துட்டாளேன்னு ஆச்சர்யமா பார்க்கறீங்களா? இந்த வாரம் எப்பவும் போல காய் வாங்க போயிருந்தேன். தேவையான காய்கறி எல்லாம் எடுத்து, எடை போட்டு check செய்யும்போது கடைக்காரர் எங்கிட்ட ‘பையிருக்குதுங்களான்னு?’ கேட்டாரு. (இங்க ஒரு விஷயம் சொல்லியாகனும். மே 12ஆம் தேதில இருந்து கோவையில 41 மைக்ரான்களுக்கு குறைவா இருக்கும் பைகளை தடை செய்யறதா கார்ப்பரேஷன் அறிவிச்சிருந்தது. ஆரம்பத்துல நானும் எங்கே கடைக்கு போனாலும் ஒரு பை கொண்டு போய்ட்டு இருந்தேன். ஆனா அறிவிப்பை யாருமே பெருசா பொருட்படுத்தலை. சரிதான்னு நானும் பை கொண்டு போறதை நிறுத்திட்டேன்.) நான் ‘இல்லைன்னு’ சொன்னதும் அவர் அங்க வைத்திருந்த ஒரு விதமான துணிப்பையில காய்கறிகள் எல்லாம் போட்டு கொடுத்தார். ‘புதுசா இருக்கேன்னு?’ நான் கேட்டதுக்கு, "Plastic bags உபயோகிக்கக் கூடாது. இந்த மாதிரி பைகள் உபயோகிக்கணும்னு கார்ப்பரேஷன்ல சொல்லிட்டாங்க. ஒரு பை ரூ. 2. இந்த பைகளை எங்கிட்ட இருந்து காசு கொடுத்து வாங்கிட்டாலும் சரி தான், இல்லை வரும்போதே பை கொண்டுவந்தாலும் சரிதான். ஆனா இனிமேல் எங்க கடையில plastic பைகள் உபயோகிக்கறது இல்லைன்னு முடிவெடுத்திருக்கோம்’னு சொன்னாரு. இதுவும் எனக்கு நல்ல வழியாதான் தோனித்து. இதே மாதிரி உறுதியோட செயல்பட்டா நிறைய விஷயங்களை மாத்திட முடியுமோ? Director Shankar படங்கள்ல மாதிரி Jet Speedல மாற்றம் கொண்டுவர முடியலேன்னாலும் சுமார் speedலயாவது கொண்டு வர முடியுமே? ‘மாற்றம்’ என்ற வார்த்தை தவிர மாற்ற முடியாதது எதுவுமேயில்லைங்கறது என்னுடைய தாழ்மையான கருத்து. உங்க ஊர்ல எல்லாம் எப்படி? இன்னும் plastic பைகள் உபயோகிக்கிறாங்களா?

நம்ப பின்னூட்டத்துல நிறைய வாசகர்கள் புதிய புதிர்கள் கேட்டு எழுதியிருக்காங்க. இப்போ நான் ஒரு புதிர் சொல்றேன். எத்தனை பேருக்கு பதில் தெரியுதுன்னு பார்க்கலாமா? (Logic எல்லாம் கேட்காம பதில் மட்டும் சொல்லணும். சரியா?)
ஒரு பஸ்ல 7 பெண்கள் இருக்காங்க. ஒவ்வொரு பெண்ணிடமும் 7 பைகள் இருக்கு. ஒவ்வொரு பையிலேயும் 7 பெரிய பூனைகள் இருக்கு. ஒவ்வொரு பெரிய பூனைகிட்டேயும் 7 சின்ன பூனைகள் இருக்கு. ஒவ்வொரு பூனைக்கும் 4 கால்கள் உண்டு (‘அதுதான் நமக்கு தெரியுமே!’). இப்போ சொல்லுங்க பஸ்ஸுக்குள்ளே மொத்தம் எத்தனை கால்கள் இருக்கு. பதில் அடுத்த அரட்டையில்.

இந்த வாரம் நிறையவே அரட்டை அடிச்சாச்சோ? ஆனாலும் முக்கியமான சில விஷயம் சொல்லாம முடிக்கமுடியாதே.

சகுனி ஏன் அப்படி செய்தாருன்னு உங்களுக்கு தெரிஞ்சுதோ?

அந்த காலத்திலிருந்த பல விதமான மூடவழக்கங்களிலே ஒரு வழக்கமா காந்தாரிக்கு இருந்த தோஷம் தீர்க்க அவங்களுக்கும் வாழைமரத்துக்கும் திருமணம் நடந்துதாம். இது காந்தாரிக்கும் திருதிராஷ்டிரருக்கும் கல்யாணம் நடக்கறதுக்கு முன்னாடியே நடந்ததால அவருக்கு சொல்லப்படலையாம். உண்மையை மறைச்சதா நினைச்சு கோவப்பட்ட திருதிராஷ்டிரர் காந்தாரியின் அப்பா, சகுனி உட்பட எல்லா சகோதரர்களையும் சிறையில் அடைச்சு வெச்சு ஒரு வேளைக்கு ஒருத்தருக்கு மட்டுமே சாப்பாடு கொடுத்திருக்காங்க. சிறையில் இருந்தவங்களிலேயே சகுனி திறமைசாலியா மட்டுமில்லாம புத்திசாலியாவும் இருந்ததால தினமும் கிடைச்ச சாப்பாட்டை சகுனிக்கே குடுத்தாங்களாம். கொஞ்ச காலத்துக்கப்புறமா திருதிராஷ்டிரர் கோவம் குறைஞ்சு வந்து பார்த்தப்போ சகுனி மட்டும் உயிரோடிருந்தாராம். சகுனி மேல பரிதாபப்பட்டு அவரை விடுவித்த திருதிராஷ்டிரர் அவரை தன்னுடைய மாளிகையிலேயே தங்கிருக்க அனுமதிச்சார். சிறையிலிருந்து வந்த சகுனி இறந்துபோன தன்னுடைய அப்பாவின் இரண்டு விரல்களையும் கூடவே வைத்திருந்தார். அதுதான் அவருடைய பகடை காய்கள். தங்கை கணவராயிருந்தாலும் தன்னுடைய அப்பா மற்றும் சகோதரர்கள் இறந்து போக காரணம் திருதிராஷ்டிரர் என்கிறதால அவரையும் அவருடைய சந்ததியையும் அழித்து பழி வாங்கினாராம் சகுனி. இந்த பதிலை நான் சொன்னதுக்கப்புறம் மறுபேச்சில்லாம என்ன கேட்டாலும் வாங்கித்தராங்க. (சத்தியமா புத்தகங்கள்தான்!)

கடைசி கட்டி மாம்பழத்துக்கு வருவோமா? ஹிந்து பத்திரிக்கையில் இந்த புகைப்படத்தை பார்த்ததும் ஒரு நொடி குழந்தை எவ்வளவு அழகுன்னு ரசிக்க ஆரம்பிச்சுட்டேன். செய்தியை படிச்சப்புறம்தான் உண்மையான குழந்தையின் புகைப்படம் இல்லை. அது ஒரு சிலைங்கற உண்மை எனக்கு தெரிய வந்தது. இந்த சிலைக்கு பேரு ‘Big Baby’. அச்சு அசல் உண்மையான குழந்தை மாதிரியே இருக்கும் இந்த சிலையை ஆஸ்திரேலியக் கலைஞர் வடிவமைச்சிருக்காங்க. லண்டனில் ஏலத்தில் இருக்கும் இதன் மதிப்பு ₤600,000லிருந்து ₤800,000 வரையிருக்குமாம். யம்மாடியோவ்…!

ஆமா அரக்கன் கோவிலுக்குள்ளே போனானா? இல்லையா? எல்லாம் சரி நீங்க ‘அரக்கி’னா படிச்சீங்க. அது அப்படி இல்லேங்க ‘அரை + கி ‘னு பிரிச்சு படிக்கணும். நாந்தான் தப்பா சொன்னா நீங்களாவது சரியா புரிஞ்சுக்க வேண்டாமா? இப்போ சொல்லுங்க ‘அரை கி’யோட (I mean half key) அரக்கன் எப்படி கோவிலுக்குள்ளே போக முடியும்?

தக்காளி, முட்டை இப்படி ஏதாவது என்மேலே விழறதுக்கு முன்னாடி நான் escape ஆகிடறேன். டா டா.. பை.. பை..

About The Author

14 Comments

 1. DeviRajan

  வணக்கம் யஷ்! கடந்த வாரம் பின்னூட்டம் எழுத முடியலை. ஆனா இந்த வாரம் எழுதாம இருக்க முடியலை. கலக்கறீங்க! நேர்ல அரட்டை அடிக்கற மாதிரியே இருக்கு. வாழ்த்துக்கள்.

 2. janani

  தக்காளி, முட்டையெல்லாம் அனுப்பற மாதிரி இல்ல. ஆட்டோ அனுப்பலாம்னு இருக்கு. Pls provide your full contact details

 3. யாகவா

  ஓ……சாரி. நான் அறை கீன்னு படிச்சிட்டேன்னா, அதான் எனக்கு தப்பா தெரியல…ஹி…ஹி……

 4. ambika

  Yஅஷ், யொஉர் அர்டிcலெச் அரெ வெர்ய் லிவெல்ய் அன்ட் இன்டெரெச்டிங்.

 5. Yash

  ஜனனிக்கு தான் என்மேலே உங்களுக்கு எவ்வளவு அன்பு! 😉

 6. Yash

  சரியா படிச்சு கலக்கிட்டீஙக யாகவா… 🙂

 7. கீதா

  பிரமாதமா கொண்டுபோறீங்க யஷ். நண்பர் ஹரிக்கு என் வாழ்த்துகள். ப்ளாஸ்டிக் பைகள் பற்றிச் சொன்னது மிகவும் உண்மை. ஒரே நாளில் கொண்டுவராவிட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாய் நாம் நம்மை மாற்றிக் கொள்ளத்தான் வேண்டும். வருங்காலச் சந்ததிக்கு வேறென்ன விட்டுச் செல்லப் போகிறோம், சுகாதாரமான சுற்றுச்சூழலைத் தவிர.

 8. Suganya

  Yash,Saguni story is so good,nice to know,keep it up.
  Engha oorla nama bag kondu pona 1 bagku 10c thallupadi.

 9. Yash

  நன்றி சுகன்யா. இதுவும் நல்ல ஐடியா தான். நம்ம ஊரிலேயும் இதை முற்ச்சி செய்யலாம்.

Comments are closed.