சில்லுனு ஒரு அரட்டை

ஹலோ ஃபிரெண்ட்ஸ்,

எப்படியிருக்கீங்க? எல்லோரும் எப்பவும் போல ரொம்பவே பிஸியோ பிஸின்னு இருக்கீங்களா? நினைச்சேன் என்னுடைய கேள்விக்கு பதில் சொல்லக்கூட முடியாம பல பேர் ஏகத்துக்கும் பிஸியாயிருக்கிறது எனக்குத் தெரியுது. (பதில் தெரிஞ்சுக்கிட்டே கேள்வி கேக்கறதுன்னா இதுதானோ!) என்னுடைய கேள்விக்கு உங்களால பதில் சொல்ல முடியலேன்னாகூட பரவாயில்லை. ஆனால் உங்களுக்குள்ளே எழும் கேள்விக்கு பதில் கிடைக்குதா? குறைந்தது உங்களுக்குள்ளே எழும் கேள்விகளையாவது கவனிக்கிறீங்களா? யோசிங்க… யோசிங்க…

என்னை கவர்ந்த புன்னகை குறுஞ்செய்திகள் சில :

"பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் தெரிந்த ஒரு மொழி புன்னகை."

"எப்படியிருக்கே?
சாப்பாடு ஆச்சா?
வேறு என்ன விசேஷம்?
இந்தக் கேள்விகளை எல்லோரும் கேட்டிருப்பாங்க.
யாரும் கேட்காததை நான் கேக்கறேன்.
இன்னிக்கு எவ்வளவு முறை புன்னகை செய்தாய்?
இதுவரை செய்யலேன்னா, இந்த குறுஞ்செய்தியைப் பார்த்தாவது ஒரு புன்னகை சிந்தலாமே!"

******

போன வாரம் ரொம்ப நாள் கழிச்சு நிலா மடை திறந்து எழுதியிருந்தாங்க. மடை திறந்து எழுத ஆரம்பிச்சதுலயிருந்து இதுவரை தனக்குக் கிடைத்த அனுபவங்களை எப்பவுமே மனம்விட்டு நம்முடன் பகிர்ந்துட்டிருக்காங்க. போன வாரம் தன்னுடைய வாழ்க்கையில் தான் எதிர்கொள்ளும் கடினமான அனுபவங்களை பகிர்ந்துக்கிட்டாங்க. "அனுபவம்கறது இன்ப துன்பம் எல்லாம் சேர்ந்ததுதானே?" அப்படீன்னு ஒரு கேள்வி கேட்டிருந்தாங்க. பல நேரங்கள்ல அனுபவமெனும்போது துன்பமான/சோதனையான நிகழ்வுகளின் மூலம் கிடைப்பது அப்படீன்னு நான் நினைச்சுட்டிருந்தேன். இதுவரை இன்பமான நிகழ்வுகளையும் ஏன் அனுபவமா நினைக்கத் தோணலைங்கிற கேள்வி எனக்குள்ளே எழுந்தது. இனிமேல் இன்பமான நிகழ்வுகளிலிருந்தும் அனுபவப்பாடம் கத்துக்கணும்னு முடிவு செய்திருக்கேன்.

தன்னுடைய அனுபவப் பகிர்வின் மூலம் பல விஷயங்களை நமக்கு சொல்லித் தரும் நிலாவிற்கு நம் எல்லோர் சார்பிலும் ஒரு பெரிய அன்பம் கொடுக்கலாமே?

*******

‘கோதாவரி’ தெலுங்கு படத்தில் கதாநாயகன் மற்றும் அவருடைய உறவினர்கள் ஒரு திருமணத்திற்காக பத்ராசலத்திலுள்ள ராமர் கோவிலுக்கு கோதாவரி நதி வழியா ஒரு லவுஞ்ச்சில் பயணம் செய்வதை நம்மைக் கவரும் விதத்தில் படமாக்கியிருப்பாங்க. எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் இனிமையான குரலில் இந்தப் படத்தில் வரும் ‘உப்பிங்கிலே கோதாவரி’ பாடல் எனக்கு பிடிக்கும். இசையை ரசிக்க மொழி தெரிஞ்சிருக்கணுமா என்ன?

http://www.youtube.com/watch?v=_qmmB9n4C3I

4 வருஷத்திற்கு முன்பு இந்த படம் பார்த்தப்போது இது மாதிரியான லவுஞ்ச் நிஜத்திலிருக்கான்னு தெரிஞ்சுக்க ஆவல் வந்தது. இணையத்தில் தேடினதுல உண்மையிலேயே அந்த லவுஞ்ச் பயணம் இருப்பது தெரிய வந்தது. ராஜமுந்திரியிலிருந்து பத்ராசலத்திற்கு கிட்டத்தட்ட 100கிமீ நதி வழியா லவுஞ்சில் பயணம் செய்வது நம்முடைய பரபரப்பான நகர வாழ்க்கையிலிருந்து ஒரு வித்தியாசமான அனுபவமா மட்டுமில்லாம சுத்தமான காற்று, இயற்கை காட்சிகளின் துணையோட சுகமான அனுபவமா இருக்கும்.

இப்போ புரிந்திருக்குமே அந்த பாட்டு எனக்கு பிடித்ததின் காரணம்!

*******

ஒரு நாளைக்கு நம்முடைய அலைபேசியில் நமக்கு வரும் அழைப்புகளில் அவசியமான/தேவையான அழைப்புகள் எத்தனை வருதுன்னு (ரொம்ப கஷ்டப்பட்டு) யோசிச்சா பெரும்பாலும் நாம சொல்லும் எண் ஒற்றை இலக்கில்தான் இருக்கும். இன்சூரன்ஸ், கடன் அட்டை, கிளப், வங்கியில் கணக்கு தொடங்குதல்… ஹப்பா முடியலை. இப்படி பல கம்பெனிகளிலிருந்தும் (விடாது கருப்பு மாதிரி) அழைப்பு வந்துகிட்டேயிருக்கும். எங்கே போனாலும் தப்பிக்க முடியாது. ஆனால் அந்த மாதிரி அழைப்புகளை எப்படியெல்லாம் தவிர்க்கலாம்னு நம்ம நண்பர் ரிஷியின் (நகைச்சுவை) படைப்பை நிலாச்சாரலில் பிரசுரிச்சிருக்காங்க. அது மட்டுமில்லாமல் அவருடைய மற்ற படைப்புகளை மின்னூலாக வாங்கி படிக்க விரும்புகிறவர்கள் கீழே உள்ள சுட்டியை சொடுக்கி விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

https://www.nilacharal.com/ebooks_list.asp

சரி, இந்த மாதிரி அழைப்புகளைத் தவிர்க்க என்ன செய்யலாம்னு நம்முடைய தொலைத்தொடர்பு நிறுவனத்தைத் தொடர்பு கொண்டால், "உங்களுக்கு சேவை செய்வதற்காகவே எங்களிடம் ஒரு தொகுப்பு உள்ளது." என்பார்கள். அந்த தொகுப்பின் கட்டணம் மாதத்திற்கு எவ்வளவு என்று விசாரித்தால் "அதிகமில்லை ஜெண்டில்மேன். வெறும் 99 ரூபாய் மட்டுமே!" என்பார்கள். இதுல இன்னொரு பிரச்சனை என்ன தெரியுமோ? அந்த தொகுப்பு நம்முடைய மாதத் திட்டத்தில் இணைத்தப் பிறகும் அதே அன்பான(!) அழைப்புகள் தொடரும். தண்டம் அழுதாலும் அழாவிட்டாலும் அழைப்பென்னவோ வந்துட்டுதான் இருக்கும். இப்படி நம் எல்லோருடைய புலம்பல்கள் அரசுக்கு கேட்டதனாலேயே, ‘தேசியளவிலான அழைக்காதீர் பதிவகம்’ (National Do Not Call Registry) என்ற சட்டத்தை இந்த மாதத்தின் 27ஆம் தேதியிலிருந்து நடைமுறைப்படுத்தவிருக்காங்க. உங்களுடைய இணைப்பு எதுவாக இருப்பினும் 1909 என்ற எண்ணுக்கு ‘START DND’ என்ற குறுஞ்செய்தியை அனுப்பவும். சில நொடிகளில் உங்களுக்கு கிடைக்கும் பதில் செய்தியில் அழைப்புகளைத் தவிர்க்கும் விதங்கள் பற்றி விவரிக்கப்பட்டிருக்கும். உங்களுடைய விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்து பதில் அளிக்கலாம். மேலும் விவரங்களுக்கு,

http://164.100.9.238/ndncregistry/index.jsp

*******

கடைசிக் கட்டி மாம்பழத்திற்கு வருவோம். இணையத்துல சுவாரஸியமா (அப்படீன்னா?) ஏதாவது கிடைக்குமான்னு தேடும்போது இந்த வீடியோ கிடைச்சுது. இந்த வீடியோவின் ஆரம்பத்துல எதுவும் புரியாம தவிச்சாலும் சில நொடிகளிலேயே உண்மை புரிஞ்சு ஒரு ஆச்சர்யமான புன்னகை உங்க இதழ்களிலே வரணுமே?

http://www.fwditon.com/fwd/view/10535

சரிங்க.. நம்பளுடைய அரட்டையை அடுத்த வாரம் தொடரும் வரை டா டா… பை பை… ஸீயூ…

About The Author