சில்லுன்னு ஒரு அரட்டை

அன்பார்ந்த நெஞ்சங்களே! உங்களுடைய அன்பு மழையில் நனைந்தது வெயிலுக்கு இதமாக இருந்தது. கருத்துகள் எழுதிய அன்பு நெஞ்சங்களுக்கும், படித்து விட்டு கருத்து எழுத நேரமில்லாத அன்பு நெஞ்சங்களுக்கும் என் கண்கள் பனிக்க நா தழுதழுக்க… நன்றி.

Nature

நீங்க மேலே பார்க்கிற படத்திற்கும்,என்னோட அரட்டைக்கும் எந்தத் தொடர்பும் இல்லீங்க. இந்தப் படத்தை உற்றுப் பாருங்க. படத்தைப் பற்றிய விவரம் வழக்கம்போல கடைசியில்!

எனக்குத் தெரிஞ்ச, கிடைத்த புது விஷயங்களை உங்களோட பகிர்ந்துக்க ரொம்ப ஆவலோட இருக்கேங்க. இன்னும் சொல்லப்போனா, விஷயங்களை உங்ககிட்ட சொல்வதற்குள் கஜபதி மாதிரி தலை வெடிச்சுடும்னு நெனச்சேன். ஆனா நல்லவேளை! அப்படி ஒரு அசம்பாவிதம் நடப்பதற்கு முன்னால பேச வந்துட்டேன்.

முதல்ல எங்க நிலாச்சாரல்ல நிறைய ஈ-புத்தகங்களை அறிமுகப்படுத்தியிருக்காங்க.
தரமான புத்தகங்கள். வாங்கிப் படியுங்க:

http://www.nilashop.com/index.php?cPath=64

இப்போ அரட்டைக்கு நான் தயார். நீங்க தயாரா?

போன வாரம் ஒருநாள் போரூர்ல இருக்கிற என் மாமா, என்னை உடனடியா வீட்டுக்கு வருமாறு ஃபோன் பண்ணினாருங்க. அவர் செலவு பண்ணி ஃபோன் பண்றாருன்னா ஏதோ முக்கிய விஷயமாகத்தான் இருக்கும்னு போனேங்க. மாமாவோட பேச ஆரம்பிக்கும் முன்னால உங்களுக்கு அவரை அறிமுகப்படுத்திடறேங்க.

மாமா சரியான தஞ்சாவூர்காரர். பழுத்த மாம்பழம் மாதிரி கலர், பசை எல்லாம். நெத்தில பட்டை பட்டையா திருநீர் இட்டுக்கிட்டு பாக்கிறவங்களுக்கு ஒரு பக்தி உணர்வை ஏற்படுத்திடுவாரு. வாயில சதா வெத்தலை போட்டு போட்டு பல்லெல்லாம் கறை படிந்திருந்தாலும் அவர் உதடு எப்போதும் சிவந்து அழகா இருக்கும். இன்னும் உங்களுக்கு அவரைப் பத்தி விவரமா சொல்லணும்னா, தி. ஜானகிராமனுடைய ‘மரப்பசு’, ‘அம்மா வந்தாள்’, ‘மோகமுள்’, மற்றும் அவரோட சிறுகதைகளைப் படிச்சுப்பாருங்க. அப்படியே மாமாவோட உருவம் கண்முன்னால வந்துடுங்க. அவரோட குணத்தை ஒரு வரில சொல்லணும்னா, கட்டுசெட்டான மிடுக்கான ரிடையர்டு ஸ்கூல் ‘பிரின்ஸ்பால்’. சைக்கிளை வீட்டில் மிதிக்கும் போதே ‘வெளுத்துடறேன் படவா’னு சொல்லிக்கொண்டு கிளம்பறா மாதிரி தோணுங்க. ஆனா, சுயமா ராப்பகலா நேர்மையா உழைச்சு ஒரு ஒரு காசாக எறும்பு மாதிரி சேர்த்து ஒரு டாக்டருக்கும் ஒரு என்ஜினியருக்கும் அப்பாவாக, சென்னையின் மத்தியப் பகுதியில் தனிவீட்டுச் சொந்தக்காரராக இருக்காருங்க.

ஸ்கூல் பத்தி பேசிய உடனே சமீபத்துல படிச்சது ஞாபகம் வருதுங்க. உபயம்- மெயில்

ஒரு அம்மா தன் மகனை எழுப்புகிறாங்க

‘எழுந்திரு ஸ்கூல் போகணும்,நேரமாச்சு’

‘போம்மா இன்னிக்கு ஸ்கூல் போகல’

‘ஏன் அடம்பிடிக்கற? நீ போக மாட்டேன்னு சொல்வதற்கு சரியான காரணம் சொல்லு.’

‘டீச்சர்களுக்கு என்னைப் பிடிக்கல. பசங்களுக்கும் என்னைப் பிடிக்கல.’

‘அதெல்லாம் நீயா நெனைப்பது. எழுந்திரு. கிளம்பு’

‘சரி, நான் ஸ்கூல் போகணும் என்பதற்கு நீ சரியான காரணம் சொல்லும்மா’

அம்மா என்ன செல்லியிருப்பாங்க? விடை கடைசியில் இல்லை. * போட்டிருக்கும் இடத்தில்!

அடடா!எங்கேயோ போயிட்டேனே! மன்னிச்சுக்கங்க. இத்தனை சிறப்புகளுடைய மாமா வீட்டிற்குப் போனேன். மாமா மாறவே இல்லை. அதே கட்டுசெட்டு, அதே மிடுக்கு, அதே தோரணை. இன்னும் மெயின் பேச்சுக்கு வரல. எதுக்குக் கூப்பிட்டிருப்பாரு என்ற எண்ணத்தோடயே இருந்தேன். பேச்சில சட்டென்று ஓரு சுவாரசியம். ‘ஆமா நீ ஏதோ கார் வாங்கப் போறியாமே. . . என்ன கார்? என்ன விவரம்’னு கேட்டார். நான் ஆடிப் போயிட்டேன். காரா ! மாமாவா ! சளைக்காமல் போரூரிலிருந்து மாம்பலம் வரைக்கும் சைக்கிள்ல போறவரு. . ! "மாமா நீங்க வாங்கப் போறீங்களா?" மெதுவாகக் கேட்டேன். ஆமாம் ‘பட்ஜெட் போட்டேன் அதுல ‘நானோ’ கார் ‘வொர்க்அவுட்’ ஆவுது. உனக்கு அதைப்பத்தி தெரியுமா அல்லது உன் ஃப்ரெண்ட் கார் ஏஜெண்ட் இருக்கானே அவன வீட்டுக்குக் கூட்டி வா. நான் பேசணும்’னாரு. வெப்ஸைட் மூலமா நான் தெரிஞ்சுக்கிட்டத சொன்னேன். அவரும் புக் பண்ணிட்டாரு. குலுக்கலுக்காகக் காத்திட்டிருக்காரு. நீங்களும் பண்ணிடுங்க.

http://www.infibeam.com/static/tata-nano.html

http://www.carwale.com/nano

வீட்டில எல்லோரிடமும் சொல்ல வேண்டும் என்ற ஆவலில் (கஜபதி தானே!) மாமாவிடமிருந்து விடைப்பெற்றுக் கொண்டு வந்தேன். வழியெல்லாம் ஒரே யோசனை. இத்தனை கட்டுசெட்டாக இருக்கும் மாமாவே ‘நானோ’ வாங்கறார்னா ஊரில எத்தனை பேர் வாங்குவாங்க. வளர்ச்சி நல்லதுதான். ஆனா அதை எதிர்நோக்கி ஏதாவது ஏற்பாடு செய்திருக்காங்களா? ‘பார்க்கிங்’ பிரச்சனை, ‘டிராஃபிக்’ பிரச்சனைக்கு என்ன தீர்வு? இதுக்கெல்லாம் அரசாங்கத்தோட உதவி உடனடியா கிடைக்குமான்னு தெரியாது. ஆனா என் கைவசம் சில ஐடியாக்கள் இருக்குங்க. நம்முடைய நிலாச்சாரல் அன்பர்கள் கிட்ட பகிர்ந்துக்க விரும்பறேங்க. நாளுக்கு நாள் கார் வாங்கிறவர்களோட எண்ணிக்கை கூடிக்கிட்டேதான் போகப்போகிறது. அதைத் தவிர்க்க முடியாது. குறைந்தபட்சம் டிராஃபிக் டென்ஷனைக் குறைச்சுக்கிட்டு ஆரோக்கியமா இருங்க.

1. காலை சிற்றுண்டி மற்றும் காலை நேர அலங்காரங்களைக் காரில் நிதானமாக டிராஃபிக்கில் நிற்கும் போது முடிச்சுக்கங்க

2. சாவகாசமாக பேப்பர் படிக்கயுங்க. உடன் மனைவி இருந்தால் வீட்டில் விட்ட சண்டையைத் தொடருங்க.

3. உங்களுடைய டென்ஷனைப் போக்கவே பிரத்தியேகமாக நிலாச்சாரல் ஷாப்பிங்கில் ஆடியோ சி. டி இருக்குங்க. வாங்கிப் போட்டுகங்க.

http://www.nilashop.com/product_info.php?products_id=489 

http://www.nilashop.com/product_info.php?products_id=490

4. ஸ்கூல் பசங்கன்னா, மறந்துவிட்ட வீட்டுப்பாடங்களைப் படியுங்க

6. காலேஜ் பசங்கன்னா, எஸ். எம். எஸ் அனுப்புங்க. லாப்டாப் இருந்தா சாட் பண்ணுங்க.

7. கார்ல டிவிடி பொருத்திட்டா படம் கூட பார்க்கலாம்.

8. வயதானவங்களாக இருந்தால் ஒரு குட்டி தூக்கம் போடுங்க. அல்லது ஜெபம் செய்யுங்க.
இன்னும் சில ஐடியாக்களை நீங்க சொல்லுங்க.

எல்லாம் சரிதான். கார்என்றால் ஓ. கே. இடிபட்டு,மிதிபட்டு நெரிசலில் சிக்கி, வெளியில் பிதுங்கி தொங்கிக் கொண்டு பஸ்ஸில் போனால் என்ன செய்வதாம். . ஐய்யய்யோ இந்த ஆட்டத்துக்கு நான் வரல.

*அந்த அம்மா என்ன சொன்னாங்க தெரியுமா?

‘உனக்கு ஐம்பது வயதாகிறது; அந்தப் பள்ளியின் பொறுப்பான பிரின்ஸிபால்’

அடப்பாவமே! காரைப் பத்தி ஆரம்பிச்சு அப்படியே கற்பனையில எங்கேயோ போயிட்டேனே. இப்ப ஒரு பயனுள்ள வெப்ஸைட் பத்தி சொல்லணுமே, என்ன பண்ணுவது? சரி மேலே பேசின விஷயங்களோடு சேர்க்க முடியாததால பின் இணைப்பா இதை வெச்சுக்குங்க. ‘ரன்வீர் பிரசாத்’ என்ற ஐ. ஏ. எஸ் அதிகாரி ஒரு ஸ்சர்ச் என்ஜீனை உருவாக்கியிருக்காரு. ஹிந்தி மற்றும் தமிழ் மொழியில் உள்ள செய்திகளை நீங்கள் இதில் தேடலாம். ரொம்ப சுவாரசியமா இருக்கு. நீங்களும் பாருங்களேன்:

http://www.chhotugoogle.com

Nature

ஆரம்பத்தில் மற்றும் முடிவில் பார்க்கும் படங்கள், மெயிலில் வந்த ரத்தினங்கள்! ஜோ சொன்ன மாதிரி! இயற்கையான காட்சின்னு சொல்றாங்க. நிலாச்சாரல் வாசகர்களோடு பகிர்ந்துக்க விரும்பினேன். அவ்வளவுதான்!

வாழ்க! வளர்க! அன்பே சிவம்!

About The Author

7 Comments

 1. bala

  கலக்கிட்டீங்க.ஜோக் சுபெர்.படம் அருமை

 2. Varsha

  படம் ப்ரமாதம்!!!!!!!! நானொ கார் வாஙும் ஆசயை தூண்டிவிட்டீர்கள். நல்ல ஜோக்ஸ். பராட்டுக்கள்.

 3. Rishi

  என்ன டாக்டர் சார்… லிப்ஸ்.. ஸ்லிப் ஆயிடுச்சா? ;-))

 4. Dr. S. Subramanian

  ரிஷி:
  லிப்ஸ் ஸ்லிப் ஆகவில்லை. அது லிஸ்ப் ஆகி விட்டது. ஆமாம் என்னுடைய முதல் பின்னூட்டத்தை ஏன் போடவில்லை? அதில் தான் அனாமிகாவின் லிஸ்ட் பற்றிய கமெண்ட் கொடுத்ததில் ஸிக்னல் முன்னால் லிப்ஸ்டிக் போடவேண்டாம் என்று எழுதினேன்.

 5. Rishi

  //ரிஷி:
  லிப்ஸ் ஸ்லிப் ஆகவில்லை. அது லிஸ்ப் ஆகி விட்டது.//
  ஆமாம்.. அதையேதான் நானும் சொன்னேன். லிப்ஸ் லிஸ்ப் என ஸ்லிப் ஆகிவிட்ட

Comments are closed.