சுருக்கங்களை நீக்க உதவிடும் முகப்பூச்சுக்கள்

வயதின் காரணமாக நம் உடலில் மாற்றம் ஏற்படுவதோடு, சருமத்தில் சுருக்கமும் ஏற்படுகிறது. சுருக்கங்கள் நீங்கிப் பளபள சருமம் பெற உதவிடும் முகப்பூச்சுக்கள், அவற்றின் தயாரிப்பு மற்றும் செய்முறை விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பாதாம் பூச்சு

தேவையான பொருட்கள்:

பாதாம் பருப்பு – 5
தேன் – 1 மேஜைக்கரண்டி
முட்டை – 1

செய்முறை:

பாதாம் பருப்புக்களைத் தண்ணீர் சேர்க்காமல் நன்றாகப் பொடித்துக் கொள்ளுங்கள். பிறகு, அதனுடன் தேனையும் முட்டையின் வெள்ளைக் கருவையும் சேர்த்து நன்றாகக் கலந்து முகத்தில் தடவுங்கள். 15 நிமிடங்களுக்குப் பிறகு ஈரத்துணியால் மெதுவாக முகத்தைச் சுத்தம் செய்யுங்கள். தொடர்ந்து இவ்வாறு செய்வதின் மூலம் சருமத்தின் சுருக்கங்கள் நீங்கி அழகு கூடும்.

வெங்காயப் பூச்சு

தேவையான பொருட்கள்:

பெரிய வெங்காயம் – 1
தேன் – ½ மேஜைக்கரண்டி

செய்முறை:

1 மேஜைக்கரண்டி வெங்காயச் சாற்றுடன் ½ மேஜைக்கரண்டி தேனைச் சேர்த்து முகத்தில் தடவுங்கள். 15 நிமிடங்களுக்குப் பிறகு ஈரத்துணியால் மெதுவாக முகத்தைச் சுத்தம் செய்யுங்கள். வெங்காயச் சாற்றின் உதவியுடன் முகச்சுருக்கம் நீங்கிப் பளபள சருமம் பெற்றிடுங்கள்!

வாழைப்பழப் பூச்சு

தேவையான பொருட்கள்:

வாழைப்பழம் – 1
பன்னீர் – 5 துளிகள்

செய்முறை:

வாழைப்பழத்தை நன்றாக மசித்து அரைத்து கொள்ளுங்கள். பிறகு அதனுடன் பன்னீர் சேர்த்து முகத்தில் தடவுங்கள். 15 நிமிடங்களுக்குப் பிறகு ஈரத்துணியால் மெதுவாக முகத்தைச் சுத்தம் செய்யுங்கள். சுருக்கங்கள் நீங்கிய அழகிய சருமம் பெற்றிடுங்கள்!

திராட்சைப் பூச்சு

தேவையான பொருட்கள்:

பச்சை திராட்சை (கொட்டையில்லாதது) – 2

செய்முறை:

நறுக்கிய திராட்சைகளைக் கொண்டு, முகத்தின் எல்லாப் பாகங்களிலும் அவற்றின் சாறு படுமாறு மேலும் கீழும் தடவுங்கள். 15 நிமிடங்களுக்குப் பிறகு ஈரத்துணியால் மெதுவாக முகத்தைச் சுத்தம் செய்யுங்கள். திராட்சை தரும் பலனை அனுபவியுங்கள்!

கேரட் பூச்சு

தேவையான பொருட்கள்:

கேரட் – 1 (பெரியது)
தேன் – 3 மேஜைக்கரண்டி

செய்முறை:

நன்றாக வேகவைத்த கேரட்டை மையாக அரைத்து கொள்ளுங்கள். பின்பு அதனுடன் தேனைச் சேர்த்து முகத்தில் தடவுங்கள். 15 நிமிடங்களுக்குப் பிறகு ஈரத்துணியால் மெதுவாக முகத்தைச் சுத்தம் செய்யுங்கள். கேரட் செய்யும் நன்மையைப் பாருங்கள்!

Disclaimer: இப்பகுதியில் இடம் பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கோ அல்லது இவற்றை செயல்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளுக்கோ நிலாச்சாரல் பொறுப்பல்ல.

About The Author