சென்னை சிறப்பு ஒலிம்பிக்ஸ் 2012

சென்னையில் கடந்த வாரம் அக்டோபர் 27ம் தேதி, சனிக்கிழமை அன்று மாற்றுத்திறனாளி பள்ளிக்குழந்தைகள் பங்குபெற்ற சென்னை சிறப்பு ஒலிம்பிக்ஸ் (Chennai Special Olympics 2012) எனும் மாபெரும் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. சென்னை மற்றும் சுற்றியுள்ள 10 பள்ளிகளிலிருந்து பெருந்திரளாய் 450க்கும் மேற்பட்ட சிறார்கள் கலந்துகொண்டனர்.
சென்னையில் பாடி சிங்காரம்பிள்ளை பள்ளிவளாகத்தில் இப்போட்டிகள் சிறப்பாய் நடந்தேறின. போட்டிகளுக்கான ஏற்பாடுகளை Steps Foundation மற்றும் Plus Dream makers இணைந்து செயல்படுத்தினர்.

பாரதியின் ‘இனி ஒரு விதி செய்வோம்…’ எனும் கூற்றுக்கிணங்க, மாற்றுத்திறனாளி சிறுவர்களும் சிறுமியரும் விளையாட்டுப் போட்டிகளில் மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இப்போட்டிகள் அவர்களுக்கு புத்துணர்ச்சியையும், புதுவித உற்சாகத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தன என்பதை அவர்களது செயல்பாடுகளின் மூலம் அறிய முடிந்தது.

போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களும் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. அனைத்துக் குழந்தைகளுக்கும் பங்குபெற்றதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டது.

ஒலிம்பிக்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான டென்னிஸ் போட்டியில் தங்கம் வென்ற திரு.சத்யமூர்த்தி அவர்கள் தலைமைதாங்கி பரிசுகளை வழங்கினார். விழா முடிவில், விழாவில் கலந்து கொண்ட பள்ளிச்சிறார்களுக்கும், ஆசிரியர்களுக்கும், இந்நிகழ்ச்சி சிறப்புற நடந்தேற பெரிதும் துணைநின்ற தன்னார்வத்தொண்டர்களுக்கும் ஸ்டெப்ஸ் ஃபவுண்டேசன் நன்றி தெரிவித்துக் கொண்டது.

Special Olympics 2012 at ChennaiSpecial Olympics 2012 at Chennai
Special Olympics 2012 at ChennaiSpecial Olympics 2012 at Chennai

Special Olympics 2012 at ChennaiSpecial Olympics 2012 at Chennai

About The Author