சேனைக்கிழங்கு வறுவல்

தேவையானவை:

சேனைக்கிழங்கு – அரை கிலோ,
மஞ்சள்தூள் – கால் தேக்கரண்டி,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – தேவையான அளவு,
சோளமாவு – ஒன்றரை தேக்கரண்டி,
மைதா – அரை தேக்கரண்டி.

அரைக்க:

சின்ன வெங்காயம் – 8,
இஞ்சி – சிறிய துண்டு,
பூண்டு ́- 5 பற்கள்,
சோம்பு – ஒரு தேக்கரண்டி,
மிளகு – அரை தேக்கரண்டி,
வர மிளகாய் – 6,
தனியா – கால் தேக்கரண்டி,
தேங்காய் – ஒரு துண்டு.

செய்முறை:

சேனைக்கிழங்கைச் சதுர வடிவமாக, சிறிது கனமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். மஞ்சள்தூள், உப்பு போட்டு சரியான பதத்தில் வேகவையுங்கள்.

அரைக்கக் கொடுத்துள்ளவற்றை ஒரு வாணலியில் போட்டு, சிறிது எண்ணெயில் நன்கு வதக்கி, பிறகு ஆற வைத்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் அரைத்த மசாலா, சோளமாவு, மைதா, உப்பு ஆகியவற்றைக் கிழங்குடன் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். தேவையானால் ஒரு சிட்டிகை கேசரிப் பொடி சேர்த்து கொள்ளலாம்.

இப்பொழுது வாணலியில் எண்ணெயைக் காய வைத்து, கிழங்குகளைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுப் பொரித்தெடுக்க வேண்டும்.

சேனைக்கிழங்கு வறுவல் ரெடி! சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

About The Author