சேமியா பக்கோடா

தேவையான பொருட்கள்:

பெரிய வெங்காயம் – 3,
சேமியா – 1 கப்,
உருளைக் கிழங்கு – 1 பெரியது,
இஞ்சி – 1 துண்டு,
பூண்டு விழுது – 1 மேஜைக்கரண்டி,
பச்சை மிளகாய் – 6,
உப்பு – தேவைக்கேற்ப,
கடலை மாவு – 1 மேஜைக்கரண்டி,
அரிசி மாவு – 1 மேஜைக்கரண்டி,
கொத்துமல்லித் தழை – 1 மேஜைக்கரண்டி,
மிளகாய்ப் பொடி – ½ மேஜைக்கரண்டி,
புதினாத் தழை – 1 மேஜைக்கரண்டி,
எண்ணெய் – பொரிப்பதற்குத் தேவையான அளவு.

செய்முறை:

முதலில், வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் மெலிதாக நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். சேமியாவைச் சிறிது நெய்விட்டுப் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். வறுத்த சேமியாவின் மேல் கொதிக்கும் நீரை ஊற்றி உடனே வடித்துவிட வேண்டும். பிறகு, மேலும் கொஞ்சம் குளிர்ந்த நீரை ஊற்றி வடிகட்டியால் வடிகட்டிக் கொள்ள வேண்டும். பின்பு, வேகவைத்த உருளைக்கிழங்கை நன்றாக மசித்துக் கொண்டு, அத்தோடு சேமியாவையும் மற்ற பொருட்களையும் சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள். கூடவே, அதில் ஒரு மேஜைக்கரண்டி சூடான எண்ணெய் விட்டுக் கலக்குங்கள். பின்னர், வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, மாவை அதில் போட்டுப் பொரித்துச் சூடாகப் பரிமாறுங்கள்!

About The Author