ஜவ்வரிசி பாத்

முள்ளங்கி ஆம்லெட்

தேவையான பொருட்கள்:

முள்ளங்கி – அரை கிலோ,
ஊற வைத்த அரிசி – 1/4 கிலோ,
மிளகாய் – 25 gms,
தனியா – 1 1/2 tsp,
ஜீரகம் – 11/2 tsp,
பூண்டு – 3 பல்,
பெரிய வெங்காயம் – 2,
உப்பு – 1 tsp,
எண்ணெய் -தேவைக்கேற்ப.

செய்முறை:

முள்ளங்கியை தோல் சீவி, கழுவி சிறு சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். ஊற வைத்த அரிசியை சிறிது அரைத்த பின்னர் முள்ளங்கித் துண்டுகள், தனியா, ஜீரகம், பூண்டு, வெங்காயத்துண்டுகள், உப்பு சேர்த்து நைசாக அரைத்துக் கொண்டு தேவையான அளவு நீர் சேர்த்துக்கொள்ளவும். பின் மெல்லிய ஆம்லெட்டுகளாக சுடவும். மிகவும் சுவையான முள்ளங்கி ஆம்லெட் தயார்.

*****

ஜவ்வரிசி பாத்

தேவையானவை:

ஜவ்வரிசி – 400 gms,
தயிர் – 1/2 லிட்டர்,
மாங்காய் – 1,
பச்சை மிளகாய் – தேவையான அளவு,
கடுகு – 1/2 tsp,
கொத்துமல்லி, கறிவேப்பிலை – தேவையான அளவு,
கேரட் – தேவையானால் போடலாம்.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் நான்கு கப் நீரை எடுத்துக்கொண்டு அதில் ஜவ்வரிசியை வேக விடவும். வெந்த ஜவ்வரிசியை தயிரில் சேர்க்கவும். நன்றாகக் குளிர்ந்ததும் மாங்காய், கேரட், கொத்துமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி சேர்க்கவும். கடுகைத் தாளித்து அதனுடன் சேர்க்கவும். ஃப்ரிஜ்ஜில் வைத்துச் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். வெயில் காலத்திற்கு உகந்த உணவு.

About The Author