ஜவ்வரிசி வடை

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு – 1 கோப்பை,
ஜவ்வரிசி – ½ கோப்பை,
கட்டித் தயிர் – 1 கோப்பை,
பொடியாக நறுக்கிய வெங்காயம் – ½ கோப்பை,
இடித்த பச்சை மிளகாய் – 1 தேக்கரண்டி,
உப்பு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்துமல்லித் தழை – சிறிது,
எண்ணெய் – பொறிக்கத் தேவையான அளவு.

செய்முறை:

ஜவ்வரிசியை ஒருமுறை கழுவி விட்டுத் தயிரில் இரண்டு மணி நேரம் ஊற வையுங்கள். பின் அதனுடன் அரிசி மாவையும், எண்ணெயைத் தவிர மற்ற பொருட்களையும் சேர்த்துச் சற்றுப் பிசைந்து கொள்ளுங்கள். பிறகு, எண்ணெயைக் காய வைத்து, பிசைந்து வைத்துள்ள மாவை வடைகளாகத் தட்டிச் சூடான எண்ணெயில் பொன்னிறமாகப் பொறித்தெடுங்கள். புதுமையான ஜவ்வரிசி வடை தயார்! சுவைத்து மகிழுங்கள்! உங்கள் அனுபவம் பகிருங்கள்!

பி.கு: தயிரைக் கவனமாகச் சேர்க்க வேண்டும்! வெங்காயத்துக்குப் பதிலாக வறுத்த நிலக்கடலையைக் கொரகொரவெனப் பொடித்தும் சேர்க்கலாம்.

About The Author