ஜோதிடம் கேளுங்கள்

தற்போது என்னுடைய நேரம் எப்படி இருக்கிறது? எனக்கு லாட்டரி அல்லது அது போன்றவற்றில் திடீர் பண வாய்ப்பு இருக்கிறதா? என்னுடைய ராசி மகரம், நட்சத்திரம் திருவோணம். – முருகையா, சேப்பாங், மலேசியா.

அன்புடையீர், தங்களது ஜாதகப்படி தற்போது தங்களுக்கு வயது 38 ஆகின்றது. 2ஆம் இடத்தில் சுக்கிரன், புதன், சூரியன் இருப்பதாலும், இரண்டிற்கு அதிபதி குருவாகி, தங்களது விருச்சிக லக்கினத்திற்குப் 12ஆமிடத்தில் அமர்ந்துள்ளதால் திடீர் அதிர்ஷ்டம் (குதிரைப் பந்தயம், ரேஸ், லாட்டரி) மூலம் பணம் வர வாய்ப்பு இல்லை. எனவே வீண் பொருள் விரையம் செய்வதைத் தவிர்த்தல் நல்லது. ஜென்ம லக்கினாதிபதி செவ்வாய் ராகுவுடன் கூடி 4ல் அமர்ந்துள்ளதால் காரணமற்ற மன சஞ்சலம் உண்டாகும். எனவே முருகன் கோவிலுக்கு செவ்வாய்க்கிழமை அன்று விரதமிருந்து அர்ச்சனை செய்து வழிபாடு செய்து வரவும். வலது கையில் பவழ மோதிரம் அணிவது நன்று.

**** 

என் குழந்தையின் பெயர் தி. தில்லை மஞ்சரி. நான் குழந்தையின் தாய். அவள் நன்றாக படிப்பாளா? அவள் நன்றாகப் படித்து, ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்பதே என் ஆசை. அவள் ஜாதகம் எப்படி உள்ளது என்று சொல்லவும்? – தி. தில்லை மஞ்சரி, மதுரை

அன்புடையீர், தங்கள் குழந்தைக்குத் தற்போது வயது ஐந்து ஆகின்றது. ஜென்ம லக்கினம் விருச்சிகம். கல்வி ஸ்தானாதிபதி வியாழன் 9ஆம் இடத்தில் உச்சம் பெற்றுள்ளதால் தீர்க்கமான உயர்ந்த படிப்புப் படிக்க வாய்ப்பு உள்ளது. கம்ப்யூட்டர் துறையில் படிக்க வைத்தால் மிகவும் நன்று. 4க்கு உடைய சனி 8ஆம் இடத்தில் உள்ளதால் சுரம், சளி சம்பந்நதமான உபாதைகள் அடிக்கடி வந்து நீங்கும. முருகன் கோவிலுக்கு முடி காணிக்கை செலுத்தி அன்னதானம் செய்து வரவும். தங்கள் குழந்தைக்கு ஜெனன ஜாதகப்படி 7 வயதிற்கு மேல் ஆயுள், ஆரோக்கியமும், ஐஸ்வர்யமும், கல்வி தீர்க்கமும் உண்டாகும். கையில் முத்து மோதிரம் அணிந்து வருதல் நல்லது.

About The Author

4 Comments

  1. srinivasan

    எனது ராசி மீனம் என் எதிர் காலம் எப்படி இருக்கு

Comments are closed.