ஜோதிடம் கேளுங்கள்

குருஜி, நான் கணவனைப் பிரிந்து கடந்த 2 வருடமாக எனது 2 குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறேன். மிகவும் வேதனையான மன நிலையோடிருக்கும் என் வாழ்க்கை எப்படியிருக்கும். இந்த நிலைமை மாறி நான் சந்தோஷமாக இருப்பேனா? – ஜீடிட்லிமா, மன்னார், இலங்கை.

அன்புடையீர், வணக்கம். தங்களுக்குத் தற்போது வயது 30 ஆகின்றது. விருச்சிகலக்கினம், திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசியிற் பிறந்துள்ளீர்கள்.
7க்கு உடைய சுக்கிரன் ராகுவுடன் சம்பந்தப் பட்டுள்ளதால் தார தோஷம் உள்ளது.

8ம் இடத்தில் சந்திரன் அமர்ந்துள்ளதாலும், தங்களது ஜென்ம லக்கினத்தைக் குரு பார்ப்பதாலும் திரும்பவும் குடும்ப வாழ்க்கை பலப்படும். 5ம் இடத்தில் கேது அமர்ந்துள்ளதால் பிள்ளைகளைக் கவனமுடன் பார்த்து வரவும். 9ல் குரு உச்சம் பெற்று லக்கினத்தைப் பார்ப்பதால் திடீர் அதிர்ஷ்டம் மூலம் நல்லதொரு நிலை ஏற்படும்.

சனிக்கிழமையில் விரதமிருந்து விநாயகர் வழிபாடு செய்து வரவும். வலது கையில் மஞ்சட் புஷ்பராகக் கல் அல்லது பவளம் பதித்த மோதிரம் போட்டுக் கொள்ளவும். “

About The Author