ஜோதிடம் கேளுங்கள்

எனக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்? சில ஜோதிடர்கள் எனது முதல் திருமணம் விவாகரத்தில் முடியுமெனக் கூறுகிறார்கள். தயவு செய்து விளக்கவும். – வேணுகோபால், ஆற்காட்

அன்புடையீர், வணக்கம். தங்களுக்குத் தற்போது வயது 26 நடக்கின்றது. 7க்குடைய புதன் ராகுவுடன் சம்பந்தப் பட்டு 2ம் இடத்தில் இருப்பதால் களத்திர தோஷம் உள்ளது. எனவே, திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படும் என்பது உண்மை.

ஜென்ம லக்கினத்தில் குரு அமர்ந்து 7ம் இடத்தைப் பார்வையிடுவதால் திருமணம் 29 வயதிற்கு மேல் நடக்கும். ஆண் வாரிசு இல்லாத இடத்தில் செய்தால் தோஷம் குறையும்.

4ல் செவ்வாய் அமர்ந்து தோஷம் அடைந்துள்ளதால் செவ்வாய்க் கிழமை அன்று காரம் சேர்க்காத உணவருந்தி, விரதமிருந்து, முருகன் வழிபாடு செய்து வர செவ்வாய் தோஷம் குறையும்.

2ல் புதன், சூரியன், ராகு இருப்பதால் திருமணத்திற்குப் பின் நல்லதொரு எதிர்காலம் உண்டு.

தங்களது வலது கரத்தில் மாணிக்கக் கல் (சிகப்பு) பதித்த மோதிரம் அணியவும்.

About The Author

3 Comments

  1. Mala

    என் பெயர் மாலா நான் உதயகுமார் என்னும் ஒருவரய் விரும்புகிரேன். என்னுடய வயது 18, அவருக்கு வயது 27.

  2. pavithra

    எனக்கு எட்டில் செவ்வாய் இருக்கு என்ன பரிகாரம் செய்ய முடியும்?

Comments are closed.