தட்டைப்பயிறு தயிர் வடை

தேவையான பொருட்கள் :

தட்டைப்பயிறு – 1/2 கிலோ
வெங்காயம் – 300 கிராம்
பச்சை மிளகாய் -10
மிளகு – 1 ஸ்பூன்
இஞ்சி – ஒரு சிறிய துண்டு
புதினா – ஒரு சிறிய கட்டு
எண்ணெய் – 1/2 லிட்டர்
கருவேப்பிலை, கொத்துமல்லித் தழை – சிறிது
உப்பு – தேவையான அளவு
கெட்டித் தயிர் – ஒரு பெரிய கப்.

செய்முறை :

1, தட்டைப்பயிறை உடைத்து நீரில் ஊற வைக்கவும். ஒரு மணி நேரம் கழிந்த பின்னால் பருப்பைச் சுத்தப்படுத்திக் கொள்ளவும்.
2, முதலில் பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை அரைத்தபின், தட்டைப் பயிறை அதிகம் நீர் சேர்க்காமல் உப்பு சேர்த்து அரைக்கவும். நன்கு மசிந்தவுடன் எடுக்கவும்.
3. பொடியாக நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை, புதினாவைச் சேர்த்து, மிளகைக் கரகரப்பாகப் பொடித்து மாவுடன் சேர்க்கவும்.
4. பின் வாணலியில் எண்ணெயைக் காய வைத்து, வாழை இலையில் சிறிய வடைகளாகத் தட்டி எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
5. கெட்டித் தயிரில் தேவையான அளவு உப்பும், நீரும் சேர்த்துச் சாப்பிட சுவையாக இருக்கும்.

About The Author