தனிமை

இதுவரை தனியாகத்தான்
பயணிப்பதாய் நினைத்தேன் ..
அந்த நினைப்பின் துணிச்சலில்
செய்ய நினைத்ததெல்லாம் செய்து கொண்டு..
மரங்களில் ஆடி..
பூக்களை முகர்ந்து..
நீர் வாரி இறைத்து..
கர்ண கடூரக் குரலில்
பாட்டும் இசைத்து..
எல்லாம் முடித்து
திரும்பிப் பார்க்கையில்..
பாதையின் ஒரு எல்லையில்
என்னைக் கடந்து போனார்கள்
அவர்கள் புன்முறுவலுடன்.,.
வெட்கத்துடன் திரும்பிப் பார்த்ததில்
நடந்து வந்த வழி எங்கும் சிதறிக் கிடந்தன
என்னுள் ஒளிந்திருந்த
என் இயல்புகள்!

About The Author

1 Comment

  1. Anand

    யன்னையெ திரும்பிப்பர்க்க வைதிட்டது வரிகல் அருமை

Comments are closed.