தனியா (கொத்துமல்லி) கா•பி

தேவையான பொருட்கள்:

தனியா – ஒரு கப்
தண்ணீர் – 2 முதல் 5 கப்
பால் – 1 1/2 கப்
பனங்கற்கண்டு (அ) வெல்லம் – சுவைக்கு

செய்முறை:

தனியாவை சிவக்க வறுத்து (rough) பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு மேசைக்கரண்டி பொடியை ஒரு வடிகட்டியில் போட்டு, கொதிக்கும் நீரை ஊற்றி வடிகட்டிக் கொள்ளவும். பாலுடன் பனை வெல்லமோ, கற்கண்டோ சேர்த்துப் பருகவும். உடல் நலக் குறைவின் போது இப்பானம் வலிவூட்டும்.

About The Author