தனியா சட்னி

தேவையான பொருட்கள் :

ஒரு மூடி கொப்பரைத் துருவல் (அ) தேங்காய்த்துருவல்
சிகப்பு மிளகாய் – 8 (அ) 10
தனியா எனப்படும் கொத்துமல்லி விதை – 1 1/2 மேசைக்கரண்டி
மிளகு – 1/2 தேக்கரண்டி
ஜீரகம் – 1/2 தேக்கரண்டி
புளி – சிறிதளவு
உப்பு, கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் (வறுப்பதற்கு).

செய்முறை:

எண்ணெயை சுட வைத்து தனியா, மிளகு, ஜீரகம், கறிவேப்பிலை, சிகப்பு மிளகாயை வறுத்த பி‎ன், தேங்காய்த் துருவலையும் சேர்த்து வறுத்து வைத்துக் கொள்ளவும். ‏இதனுடன் உப்பு, புளி சேர்த்து அரைக்கவும்.

வாசனையுட‎ன் கூடிய சுவையான தனியா சட்னி தயார்!

About The Author