தன் பிணத்தைத் தான் தொட்டுப் பார்க்கையில் (2)

கழிந்து போன
மூச்சுகளின் தீநாற்றத்தை
ஊடுருவிப் பாய்ந்தான்…

காற்றில்
அறையப்பட்ட அலறல்களை
அப்புறப்படுத்தியபடி
அவசரப்பட்டான்…

கடந்து வந்த
படிகளில் கிடந்த கபால ஓடுகளைக்
காலால் இடறிக்கொண்டே
போய்ப் பார்த்தால்…

அவன் வாழ்க்கை
எழுந்து வரவில்லை…
ஏனென்று கேட்கவில்லை…

சட்டென்று
தொட்டுப் பார்த்தான்
சில்லிட்டிருந்தது உடம்பு
எப்போது செத்ததோ?

About The Author