தமிழ் அறிந்த திறமைசாலிகள் தேவை

இணையத்தில் கடந்த பதின்மூன்று வருடங்களாக சீரிய முறையில் தமிழ்ச்சேவை அளித்து வருகிறது நிலாச்சாரல் இணைய இதழ்.

உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழ்ச் சமுதாயத்திற்குத் தமிழ் இலக்கியங்களை எளிமையாகப் படிக்க வாய்ப்பளிப்பதையும், வருங்கால சந்ததிகளுக்குத் தமிழ் இலக்கியப் பொக்கிஷங்களைப் பாதுகாத்துத் தருவதையும் இலக்காகக் கொண்டு தொடர்ச்சியாக தமிழ் மின்னூல் ஆக்கத்தில் இயங்கி வருகிறது.

இத்திட்டத்தில் இணைந்து பணியாற்ற பின்வரும் பணிகளில் திறன் பெற்றோர் தேவைப்படுகிறார்கள்:

1) தட்டச்சு செய்தல் (யுனிகோட்டில் தட்டச்சு செய்வோர்க்கு முன்னுரிமை)

2) பிழைதிருத்துதல்

3) பக்க வடிவமைப்பு

4) ஒருங்கிணைப்பாளர்கள்

5) தரப்பரிசோதனை

உங்கள் வீட்டில் இருந்தே உங்களால் இயலும் நேரங்களில் பணியாற்றலாம். பணிக்கேற்ற ஊதியம் வழங்கப்படும்.

பக்க வடிவமைப்பாளர்கள் மைக்ரோசாஃப்ட் வேர்டில் சிறந்த முறையில் பணியாற்றத் தெரிந்திருந்தால் போதுமானது.

ஒருங்கிணைப்பாளர் பணிக்கு சிறந்த தொடர்பாடல் திறனும், திட்டமிடலும் முக்கியமானவை.

தேர்ந்தெடுக்கப்படுவதற்கான மிக முக்கிய தகுதிகள் :

1. தரமான பணி
2. நேர்மை/ நம்பகத்தன்மை
3. குறித்த நேரத்தில் பணி முடித்தல் (Strong Commitment)
4. தொடர்ந்து தொடர்பில் இருத்தல் (Communicating the status)

பணிக்கான ஊதியம் மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கப்படும். வேலைகளை விரைந்து முடிப்போர்க்கு கூடுதல் பணிகள் கிடைக்கப்பெறும். விரைந்து பணி முடித்தல் மற்றும் தரத்தினை கருத்தில் கொண்டு ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.

விருப்பமுள்ளவர்கள் பின்வரும் தொடுப்பில் பதிவு செய்து விவரங்களைப் பூர்த்தி செய்யவும்

http://nilacharal.com/ocms/Resource/resource_login.asp

"நான் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ‘நிலாச்சாரல்’ நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். உண்மையில் இது ஒரு நல்ல அனுபவம் எனச் சொல்லலாம். வீட்டிலிருந்தபடி, நம்முடைய ஓய்வு நேரத்தில், சொல்லப் போனால், நமக்கு விருப்பப்பட்ட நேரத்தில் வேலை செய்யலாம். இணைய நிறுவனம் என்பதால் ஊதியமெல்லாம் ஒழுங்காகத் தருவார்களோ இல்லையோ எனச் சந்தேகப்படாதீர்கள்! சொன்னால் சொன்னபடி, சரியாக ஊதியம் வந்து நம் கணக்கில் விழுகிறது!! மிகுந்த மரியாதை, முதலாளி – தொழிலாளி வேறுபாடு துளியும் இல்லாத பணிமுறை, உடன் பணிபுரிவோரின் அன்பு ஆகியவையே தொடர்ந்து நான் இங்கு பணியாற்றக் காரணம். வருங்காலத்தில் இதழியல், பதிப்பியல், எழுத்து போன்ற மொழி சார்ந்த, எழுத்து சார்ந்த துறைகளில் மிளிர விரும்புவோருக்கும், வளர்ந்து வரும் இணையம் சார் தொழில்களில் ஈடுபட விரும்புவோருக்கும் இந்த நிறுவனத்தில் பணியாற்றுவது சிறந்த அனுபவமாக இருக்கும் என்பது உறுதி!"

– இ.பு.ஞானப்பிரகாசன்
புது குபேரன் நகர்,
மடிப்பாக்கம்,
சென்னை
பேசி: +919043585723.

மேலதிக விபரங்கள் தேவையெனில் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி:  nila.pr [at] gmail.com

******

About The Author

13 Comments

 1. suresh kumar.j

  ணிலசரல் இன்னயதலதில் யெனக்கு பனீ தன்து உதவுமாரு பனி வன்புடன் கேட்டுகொல்கிரென்

 2. P.S.Sugankumar

  தமில் T/W தெரிந்தால் தான் , வீட்டில் இருந்து பனம் சம்பாரிக்க முடியுமா? எனக்கு எங்லிஷ் ட்/ந் மட்டும் தான் தெரியும் ,
  ஏதாவது கொமெ பசெட் நொர்க் இருக்கா?

 3. Gajalakshmi

  னிலா சாரல் இன்னயதளதில் யெனக்கு பணி தந்து உதவுமாரு பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்

 4. P. Janaki

  எனக்கு நிலாச்சாரலில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தால் ஆர்வமுடன் பணி செய்வேன்

 5. B Sadesh

  எனக்கு நிலா சாரலில் வேலை செய்ய வாய்ப்பு கிடைத்கல் நன்ட்ராக பணி செய்வேன்.

 6. ஜெகதீ்ஷ் குமார்

  அட போயா எதை டைப் செய்து அனுப்பினாலும் rejected சொல்றது

 7. jayapriya

  நான் பேஜ் மேக்க்ரில் தமிழில் டைப் செய்து அனுப்பலாமா

 8. meenal devaraajan

  உங்களுடன் இணைந்து வேலை செய்ய ஆவலுடன் இருக்கிறேன். விண்ணப்பாரத்தை நிறைவு செய்து அனுப்ப முயன்றும் முடியவில்லை ஏன்?

 9. s. velmurugan

  நான் உங்களுடன் இணைந்து வேலை செய்ய ஆவலுடன் இருக்கிறேன். விண்ணப்பாரத்தை நிறைவு செய்து அனுப்பியுள்ளேன். தயவுசெய்து பரிசீலிக்கவும். நன்றி, வணக்கம்.

Comments are closed.