தலைமுடி உதிர்வதைத் தடுத்திடச் சில எளிய வழிகள்

1. தினமும் தலைமுடிக்கு 5 முதல் 10 நிமிடங்கள் மசாஜ் செய்திடுங்கள்! இப்படி மசாஜ் செய்வதால் இரத்தவோட்டம் அதிகரிக்கும். அதனால் தலைமுடிக்குத் தேவையான ஊட்டம் கிடைத்து உதிர்வது குறைகிறது.

2. வைட்டமின் ஈ சத்து நிறைந்த எண்ணெய்யினால் தலைமுடி வேர்களில் மசாஜ் செய்வதன் மூலம் முடி உதிர்வது குறைந்து, நாளடைவில் முற்றிலும் நின்றுவிடும்.

3. தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு தலைமுடி வேர்களில் தேங்காய் எண்ணெய் (அ) பாதாம் எண்ணெய் தடவுங்கள்!

4. எலுமிச்சை இலைகளை நீரில் நன்றாகக் கொதிக்கவிட்டு, ஆறிய பிறகு தலைமுடியை அந்நீரினில் அலசுவதன் மூலம் முடி உதிர்வதைக் கட்டுப்படுத்திடலாம்.

5. தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பு தலைமுடியை வாருவதன் மூலம் சிடுக்குகள் ஏற்படுவது குறையும். இதனால் முடி உதிர்வதும் கட்டுப்படும்.

6. தலைமுடி ஈரமாக இருக்கும்போது தலை வாருவதைத் தவிர்த்திடுங்கள்! இதனால் தலைமுடி உடைவதைத் தடுத்திடலாம்.

7. தலைமுடிக்குச் செயற்கைச் சாயத்திற்குப் பதிலாக நன்றாக அரைத்த மருதாணியைத் தடவுவதால் முடி உதிர்வதும் குறைந்திடும், பக்க விளைவுகளற்ற கருங்கூந்தலும் கிடைக்கும்.

8. ஹேர் டிரையர் பயன்படுத்தும்போது அது தலைமுடியின் அருகில் இல்லாமல் கொஞ்சம் தள்ளி இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்!

9. உடலில் சுண்ணாம்புச் சத்து (கேல்ஷியம்) குறைவதன் அறிகுறியாகவும் தலைமுடி உதிரலாம். தினமும் 2 டம்ளர் பால் அருந்துவதால் தேவையான சுண்ணாம்புச் சத்து கிடைத்து, தலைமுடி உதிர்வதும் குறைந்திடும், உடலும் நலம் பெறும்.

10. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை பிளவுபட்ட முடிகளை ட்ரிம் செய்திடுங்கள்!

11. தலைமுடியை துணி/ஹேர் பாண்டுகள் உதவியுடன் இறுக்கமாகக் கட்டுவதை தவிர்த்திடுங்கள்!

12. தலைமுடி ஈரமாக இருக்கும்போது ஹேர் பாண்ட் உபயோகிப்பதைத் தவிருங்கள்!

13. தலைமுடியை வெந்நீரிலோ குளிர்ந்த நீரிலோ கழுவுவதைத் தவிர்த்திடுங்கள்! வெதுவெதுப்பான நீரினால் தலைமுடியை அலசுவதின் மூலம் தலைமுடி உதிர்வதும் உடைவதும் குறைந்திடும்.

14. வைட்டமின் பி, சி, ஈ மற்றும் தாதுச் சத்துள்ள பொருட்களை உணவினில் சேர்ப்பதன் மூலம் தலைமுடி உதிர்வது குறைந்திடும்.

15. மன அழுத்தம் காரணமாகவும் தலைமுடி உதிரலாம். ஆதலால், யோகா மற்றும் தியானப் பயிற்சிகளை மேற்கொண்டு, மன அழுத்தம் நீங்கி அமைதியான வாழ்வு வாழ்ந்திடுங்கள்!

Disclaimer: இப்பகுதியில் இடம் பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கோ அல்லது இவற்றை செயல்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளுக்கோ நிலாச்சாரல் பொறுப்பல்ல.

About The Author

1 Comment

  1. thulasi

    என்னுடைய உதடு ரொம்பவும் கருமையக எருக்கிரதேல்லொரும் வித்தியசமகவெ பக்கிரர்கல் என்னுடைய உதடு சிவப்பக மருவதுக்கு சில குரிப்புகல் சொல்லுகல்

Comments are closed.