தாயுமானவள்

சகி !
ஒரு முழம் தாலி கட்டி – நான்
உலகளந்த களைப்பிலிருக்கிறேன்!…
நீயோ, அதிகாலை தொடங்கி – அந்தி சாயும்
வரைக்கும் அனைத்துமாகி நிற்கிறாய்!…

முகம் சுளித்ததில்லை…
கண்ணோரம் நீர் கசிந்ததில்லை.. ..
களைத்துப் படுத்ததில்லை – நீ
கண்ணயர்ந்து நான் பார்த்ததில்லை!.. ..

வேலை நிமித்தம் நான் வெளிக்கிளம்புகையில்,
வாயிற்புறம் வந்து நீ வழியனுப்பி வைக்கிறாய்!….
உன் கண்ணோரம் வழிகின்ற காதலில்,
முற்றிலுமாய் கரைந்து போகிறேன் நான்!..

உண்மையில் சகி – உன்னில்
என்னை தொலைத்து வெகு நாட்களாகும்!..
முன்னாளில் சிறு புள்ளியாய் – பின்னாளில்
பூமி மறைத்த பேரண்டமாய் நீ!….

உண்மை சொல் சகி! – என்னில் என்ன வேண்டும் உனக்கு?..
ஊரார் மெச்ச நான் வழிப்படுத்தவில்லை,
ஒரு நாளும் உன்னோடு நான் வெளிக்கிளம்பவில்லை,
உனக்காய் உண்மையில் ஒன்றுமே யோசித்ததில்லைதான்!..

ஆனால் நீயோ – எப்போதாகிலும் என்னிலிருந்து வெளிப்படும்
புன்னகையிலும், முத்தங்களிலும் கரைந்து போகிறாய்!….
ஆயினும் என்ன – அனைத்துமானவள் நீ
ஆகவே என்னைக் கொஞ்சமேனும் நீ சகி!….

About The Author

2 Comments

 1. deepa

  உங்களது படைப்பு பெண்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாய் இருக்கிறது. வாழ்துக்கள்.

 2. subag

  டியர் ஸார்,

  வணக்கம். உங்கள் கவிதை மிகவும் அருமையாக இருந்தது. உண்மையில் பெண்மைக்கு இந்த அளவில் மதிப்பு கொடுத்த கவிதைகளை நான் முதன் முதலாக பார்க்கிறேன். இனி உங்களின் கவிதைகளை நிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய எதிர்பார்க்கிறேன்.

  நன்றியுடன்,
  சுபா

Comments are closed.