தாய்ப்பாலி‎ன் சிறப்பு

நம் மு‎ன்னோர்கள் சொல்வார்கள். "இந்த உலகில் பிறக்கும் அனைவருக்கும் அவர்கள் சாப்பிடும் சாப்பாட்டில்/அரிசியில் அவர்கள் பெயரெழுதியிருக்கும்" எ‎ன்று.

ஒரு எறும்பிற்கும் அதேபோல உணவு ஒதுக்கப்பட்டிருக்கிறதா எ‎ன்ற பார்வதி தேவியி‎ன் கேள்விக்கு சிவ‎ன் அளித்த பதில் "ஆம்!". எறும்பை ஒரு பாத்திரத்தில் அடைத்துவிட்டு, சிவனிடம் விளையாடிப் பார்த்த பார்வதியி‎ன் கதை அனைவரும் அறிந்ததே!

எது இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரு தாளகதியில்‏ இந்த உலகம் தானே இயங்கும் வகையில் உருவாகியிருப்பது அதிசயத்திலும் அதிசயம்தா‎னே!

குழந்தை ஒ‎ன்று உருவாகும்போதே அதற்கும் உணவு நிச்சயிக்கப்பட்டு விடுகிறது, தாயின் மார்பின் மூலம்! இயற்கை செய்யும் ஜால வித்தைகளில் ஒ‎ன்று இந்தத் தாய்ப்பால்.

குழந்தை பிறக்கும் வரை வெறும் கொழுப்புத் தசைகளாக விளங்கும் மார்பகங்கள், மகப்பேறு அடைந்துவிட்டால் பால் சுரக்கும் கலசங்களாக மாற்றமடைகி‎ன்றன. குழந்தைக்கெ‎ன்று உணவு தயாரிக்க நாம் மெனக்கெடவே வேண்டியதில்லை. அது ‘தானே’ கிடைக்கிறது. குழந்தையும் தாயி‎ன் மார்புக் காம்புகளிலிருந்து பாலை உறிஞ்சி எடுக்க எந்த டிரெயி‎னிங் புரோகிராமிற்கும் செல்வதில்லை!

‏ தாய்ப்பால் தாயி‎ன் இரத்தத்திலிருக்கும் சத்துப் பொருட்களிலிருந்து பெறப்படுகிறது. சராசரியாக 500 கலோரிகள் எரிக்கப்படுகிறதாம் தாய் தாய்ப்பால் வழங்குவத‎ன் மூலம்! மகப்பேறு காலத்திற்குப் பி‎ன் இயல்பாகக் கூடும் உடல் எடையைக் குறைக்க, ‏இந்த தாய்ப்பால் புகட்டுதல் உதவுகிறது. அப்பப்பா! ஒ‎ன்றுக்கொ‎ன்று எத்துணைத் தொடர்புகள்!

மற்றொரு விஷயம், தாய்ப்பாலில் காணப்படும் சத்துக்களும், அவற்றி‎ன் அளவுகளும் ‎ நிலையாக இருப்பதில்லையாம். குழந்தை பிறந்த காலத்திலிருந்து, வெவ்வேறு காலங்களுக்கு அவற்றி‎ன் மாற்றம் இருந்து கொண்டிருக்கிறதாம். அதாவது, குழந்தையி‎ன் தேவைக்கேற்ப ‏ இயற்கையே அத‎ன் உணவி‎ன் தன்மையை மாற்றிக் கொண்டிருக்கிறது. சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தியையும் தாய்ப்பால் வழங்குகிறது. தாய்ப்பால் மட்டுமே அதை வழங்க முடியும் எ‎ன்பதும் குறிப்பிடத்தக்கது.

தாய்ப்பால் மிகவும் சுத்தமானது, அத‎ன் தரத்தைப் பற்றிய ச‎ந்தேகம் தேவையில்லை என்றாலும், போதைப்பொருள் உட்கொண்டிருக்கும் பெண்டிரி‎ன் தாய்ப்பால் குழந்தைக்கு ‎பாதகம் ஏற்படுத்துவதாகவே அமைந்து விடுகிறது. முக்கியமாக, ஹெச்.ஐ.வி. கிருமிகளால் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களி‎ன் தாய்ப்பால் மூலமாக ஏதுமறியா அப்பாவிக் குழந்தைகளுக்கும் அது செ‎ன்றடைந்து அவர்களி‎ன் வாழ்வை சூனியமாக மாற்றி விடுகிறது.

தாய்ப்பாலி‎ன் தரத்தை தாயி‎ன் உணவுப் பழக்கங்களும், நோய்களும், போதையைத் தரும் டாக்ஸி‎ன்களும் மட்டுமல்லாது, மிக முக்கியமாக, தாயி‎ன் மனோநிலையும் நிர்ணயிக்கிறது. குடும்பத்தில் அதிக மன அழுத்தத்தினால் பாதிக்கப்படும் பெண்களுக்கு தாய்ப்பாலி‎ன் சுரப்பி‎லும், அதன் தரத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படுகிறது.

ஒரு வயது நிறைவடைவதற்கு மு‎ன்னரே மாட்டுப்பாலோ, ஆட்டுப்பாலோ அல்லது செயற்கை பால் பவுடர்களையோ குழந்தைக்கு உட்கொள்ளத் தருவது நலம் பயக்காது எ‎ன்று கூறுகிறார் வாஷிங்ட‎ன் ஸ்டேட் பல்கலைக்கழகத்தி‎ன் பேராசிரியர் ஸ்டெஃபானி கிளார்க். இந்தப் பால் வகைகள் குறைவான இரும்புச் சத்தையும், புரோட்டி‎ன் சத்துக்களி‎ல் வேறுபாட்டையும் கொண்டிருப்பதாக அவர் த‎ன் ஆய்வுக் கட்டுரையில் கூறுகிறார். விலங்குகளி‎ன் பாலில் காணப்படும் ‘கேஸி‎ன்’ குழந்தைகளி‎ன் ஜீரணத்தை மந்தப்படுத்துகிறதாம்.

பி‎ன்வரும் அட்டவ‎ணை பல வகை பால்களி‎ன் தரத்தைப் பட்டியலிடுகிறது.

Milk comparision

மேலே கூறப்பட்டிருக்கும் அளவுகளில் தாய்ப்பாலி‎ன் அளவை நிலையான அளவுகோலாக எடுத்துக் கொண்டு மற்றவற்றை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளவும்.

ஆராய்ச்சியாளர்கள் ஹார்வுட், டார்லோ மற்றும் மோக்ரிட்ஜ் ஆகியோரி‎ன் முடிவுப்படி, எட்டு மாதங்களுக்கும் மேலாக தாய்ப்பால் புகட்டப்பட்டு வளர்க்கப்பட்ட குழந்தைகளை, ஏழெட்டு வயதான பி‎ன் ஆராய்ந்ததில் அந்த வயது காலகட்டத்தில் அவர்களது IQவில் குறிப்பிடத்தக்க மு‎ன்னேற்றம் இருப்பதாக அறிவித்துள்ளனர். IQ வளர்ச்சிக்கு பல்வேறு காரணிகள் இருப்பினும், அதிக கால தாய்ப்பால் உணவு அவர்களி‎ன் ஜீன்களிலேயே மாற்றத்தை ஏற்படுத்துகிறது எ‎ன்பது அவர்களது ஆராய்ச்சி முடிவு.

About The Author

7 Comments

 1. maleek

  நல்ல பயண்பாடு மிக்க ஆக்கம்,நல்லவேளை (தலைசிறந்த!)இராணுவ அதிகாரியா
  ஆகல.

 2. P.Balakrishnan

  தாய்ப்பால் குழந்தை பிறந்த முதல் 6 மாதங்களுக்குக் கட்டாயம் கொடுக்கவேண்டும். குழந்தைக்குத் தேவையான ஊட்டச் சத்தும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதில் உள்ளது. தொடர்ந்து தாய்ப்பால் கொடுப்பதால் தாயின் உடல் எடை குறைவதோடு மட்டுமல்லாமல் மன அழுத்தமும் குறையும்; புற்று நோய் தாக்கும் அபாயம் குறையும். பிற்காலத்தில் ஏற்படும் எலும்புத் தேய்மானம் குறையும். எச்.ஐ.வி. பாதித்த தாயும் முதல் 6 மாதம் தய்ப்பால் கொடுக்கலாம்.குழந்தைக்கு நோய் இல்லை என்பது உறுதிப்படுத்தப்படவேண்டும் ஏ.ஆர்.வி(ஆன்டி -ரெட்ரோ வைரல்)மருந்துகள் தொடர்ந்து கொடுப்பது நோய் பாதிப்பைக் கட்டுப்படுத்தும்.ஆனால் தாய்ப் பாலும் புட்டிப் பாலும் மாறி மாறிக் கொடுப்பது முதல் 6 மாதக் குழந்தைக்கு நோயின் பாதிப்பை அதிகரிக்கும்.காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தாய் தாய்ப்பாலை பம்ப் செய்து மற்றவர் மூலம் குழந்தைக்குப் புகட்டச்சொல்லவேண்டும். சூறாவளி,,அடைமழை,காட்டுத்தீ,பன்றிக்காய்ச்சல் போன்ற புளு காய்ச்சல், போர் இவைபோன்ற மிகவும் நெருக்கடியான காலங்களில் தாய்ப்பால் தவறாமல் கொடுப்பது குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும் என்று- வாபா-(வேர்ல்டு அல்லையன்ஸ் பார் பிரெஸ்ட் பீடிங்) என்னும் உலக நேய அமைப்பு இவ்வாண்டு வலியுறுத்துள்ளது.(பார்க்க- வாபா2009)

 3. Rishi

  தகவல் களஞ்சியங்களைக் கொட்டறீங்களே பாலு சார்!
  அது சரி.. அமெரிக்காவுல இருந்து எப்போ திரும்பறீங்க?

 4. P.Balakrishnan

  நன்றி ரிஷி. இரண்டு நாட்களுக்கு முன்புதான் சிக்காகோ சென்று வந்தேன். விரைவில் இந்தியா பேசுவதைக் கேட்க வருவேன். அது சரி…மண்ணுக்கு மரம் பாரமா.. பாடலைக் கேட்டிருக்கிறீர்களா?அதைக் கேட்டால் குழந்தையைப் பேணி வளர்க்கவேண்டும் என்பதன் பொருள் புரியும்.கேட்டு ரசியுங்கள்.

 5. kannan

  I am Tamil Lecturer in KSR COLLEGE OF ARTS AND SCIENCE . I read your mother feed article very nice. It is most need for our NATION. Thank you ALL THE BEST

 6. Rishi

  வருகைக்கு நன்றி கண்ணன்.
  தமிழ் விரிவுரையாளர்களின் வருகை மலர்ச்சியைத் தருகிறது!
  சங்க கால நிகழ்வுகள், இலக்கியங்களைப் பற்றி கட்டுரைகளை எழுதலாமே?!
  சுவைக்க நாங்க ரெடி.. சமைக்க நீங்க ரெடியா?

  அப்புறம்.. கே.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி முன்னாள் சிவில் துறைத்தலைவர் டாக்டர்.முத்துராமு அவர்களைத் தெரியுமா? எனது நண்பர்தான் அவர். அவரும் அவ்வப்போது நிலாச்சாரலுக்கு வலம் வருவார்.

Comments are closed.