தால் மக்கானி

தேவையான பொருட்கள்:

முழு உளுந்து – 1 கோப்பை
வெங்காயம் – 3
தக்காளி – 4
இஞ்சி – பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி
மிளகாய்த் தூள் – 1 ½ தேக்கரண்டி
தனியாத்தூள் – 1 ½ தேக்கரண்டி
மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி
பட்டை – 1 துண்டு
சீரகம் – 1 தேக்கரண்டி
வெண்ணெய் – 2 மேசைக்கரண்டி
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

செய்முறை:-

உளுந்தை நன்கு கழுவி 6-இலிருந்து 8 மணி நேரம் வரை ஊறவிட வேண்டும்.

வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

குக்கரை வைத்து, தேவையான அளவு எண்ணெயை ஊற்றுங்கள். காய்ந்ததும் பட்டை, சீரகம் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.

வெங்காயம் நன்கு வதங்கியவுடன் இஞ்சி – பூண்டு விழுது, மிளகாய்த் தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள் சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்க வேண்டும்.

பின்பு, தக்காளி சேர்த்து, அது நன்கு வதங்கியதும் ஊறிய உளுந்தைப் போட்டு, 3 கோப்பைத் தண்ணீர் சேர்த்துக் குக்கரை மூடுங்கள். 3 அல்லது 4 விசில் வந்ததும் இறக்குங்கள்.

சிறிது நேரம் கழித்துக் குக்கரைத் திறந்து, உளுந்தை லேசாக மசித்து விடுங்கள். பின்னர், தேவையான உப்புச் சேர்த்து, மீண்டும் அடுப்பில் ஏற்றி ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும். சூடாக இருக்கும்போதே வெண்ணெயைக் கலந்து விட வேண்டும்.

அவ்வளவுதான், சூடான சுவையான ‘தால் மக்கானி’ தயார்! இதை சப்பாத்தி, ரொட்டியுடன் பரிமாறுங்கள்.

சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

About The Author