திருவண்ணாமலை கிரிவலம் மகிமை (2)

கிரிவலம் வருவதற்கு சிறந்த நாட்கள்

இறைவனால் (இயற்கையாக) படைக்கப்பட்ட அனைத்து நாட்களுமே சிறந்த நாட்கள்தான். இருப்பினும் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அவற்றில் கிரிவலம் வருவதற்கு சிறந்தது அமாவாசை மற்றும் பெளர்ணமி நாட்களே.

அருள் தரும் அமாவாசை

இறைவனாகிய சிவன் தேவர்களுக்காக விஷம் உட்கொண்ட நாள் அமாவாசையாகும். தேவர்கள் என்றும் இளமையுடனும், அறிவாற்றலுடனும், திடகாத்திரமான உடலுடனும் வாழ்வதற்கு இறைவன் அளித்த வரமே திருபாற்கடலில் உள்ள அமுதமாகும். அந்த அமுதத்தை எடுக்க வேண்டி தேவர்கள் மலைகளையும் ஆதிசேசன் பாம்பையும் பயன்படுத்தினர். அப்போது ஆதிசேசனின் விஷத்தால் கடலில் உள்ள உயிரினங்கள் அழிந்ததோடு அமுதத்தில் விஷமும் கலந்துவிட்டது. தேவர்களின் வேண்டுதலுக்கிணங்க அந்த சர்வேஸ்வரனே திருவோடேந்தி விஷத்தை பருகுகிறார். அதனால் அவர் மேனி நீலநிறமாக மாறுகிறது. அந்த நேரத்தில் சர்வேஸ்வரனைக் காண மூவுலகிலும் உள்ள தேவர்களும், இப்பூவுலகில் இருந்த அனைத்து சித்தர்களும், யோகிகளும் ஒன்று கூடிய நாளே அமாவாசை. ஆகவே அமாவாசை தினத்தில் கிரிவலம் வருவதால் சித்தர்கள், யோகிகள், மூவுலக தேவர்கள் மற்றும் அந்த சர்வேஸ்வரனின் அருளையும் பெற முடியும் என்பது ஐதீகம்.

பொருள் தரும் பெளர்ணமி

கிரிவலம் வருவதற்கு மற்றொரு சிறந்த நாள் பெளர்ணமி ஆகும். இந்த தினத்தில் கிரிவலம் வருபவர்களுக்கு பொருள், நோய் இல்லாத வாழ்க்கை, நினைத்த காரியம் கைகூடுதல் போன்ற நற்பலன்கள் உண்டாகும் என்பது நம்பிக்கை. எந்த நாளாக இருந்தாலும் சரியான முறையில், அமைதியாக கிரிவலம் வந்தால் பலன் கிடைக்கும் என்பது மட்டும் திண்ணம்.

அருணாச்சலேஸ்வரர் கோவிலின் கிழக்கு இராஜகோபுர வாயிலில் இருந்துதான் பெரும்பான்மையானோர் கிரிவலப் பயணத்தை ஆரம்பிக்கின்றனர்.

கிரிவலப் பயணம்

கிரிவலத்தில் முதல் அரை கிலோமீட்டர் பயணத்தில் நம் கண்ணுக்கு தென்படுவது இந்திர லிங்கமாகும். இது சாலையின் இடதுபுறத்தில் அமைந்திருக்கிறது. புதிய வேலை, பதவி உயர்வு, பணியிட மாற்றம் ஆகியவற்றிற்கு இவரை வேண்டிக் கொள்ளலாமாம். அதன் பின்பு நந்தி விநாயகர் ஆலயம், அக்னி விநாயகர் ஆலயமும் சிறிது தொலைவில் இருக்கின்றன. வழி நெடுகே மேலும் பல சிறு கோவில்களும் இருக்கின்றன.

பக்தர்களின் வசதிக்காக ஒவ்வொரு அரை அல்லது ஒரு கிலோமீட்டருக்கும் இடைவெளியில் சாலையின் இடது பக்கம் பலகையில் கடந்து வந்த தூரம் மற்றும் கடக்க வேண்டிய தூரம் ஆகியவற்றை தெளிவாக எழுதியிருக்கின்றனர். மொத்தம் பதினான்கு கிலோமீட்டர்களை கடக்க வேண்டும்.

அடுத்த ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் வருவது அக்னி லிங்கமாகும். இது சாலையின் வலது புறத்தில் சற்று உள்ளடங்கி அமைந்துள்ளது. இங்கு மட்டும் பிரகாரத்தை சுற்றி வந்து அக்னிலிங்கேஸ்வரரை தரிசிக்க வேண்டியிருக்கிறது. மூலவருக்கு எதிரில் ஒரு பலிபீடம் சற்று சாய்ந்த நிலையில் அமைக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலான லிங்கக்கோவில்கள் இரண்டு அடுக்கு கருவறை மற்றும் சுற்று பிரகாரம் மட்டுமே கொண்டுள்ளன.

அடுத்த அரை கிலோமீட்டரில் சாலையின் வலது பக்கத்தில் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளின் ஆசிரமம் பரந்து விரிந்ததாக இருக்கிறது. ஆசிரமத்திலிருக்கும் ஒரு ஆலமரத்தில் திருமணம் நடைபெறுவதற்காக வேண்டிக்கொண்டு தாலிக்கொடிகளும், நாணயங்கள் அடங்கிய துணிகளையும் கட்டி தொங்க விட்டிருக்கின்றனர். இலவச அன்னதான மண்டபமும் உள்ளே அமைத்திருக்கின்றனர்.

வெளியில் வந்து மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தால் சற்று தொலைவில் வலது பக்கத்தில் இரமணரின் ஆசிரமம் இருக்கிறது. இதுவும் நன்றாக பரந்து விரிந்திருக்கிறது. உள்ளே இடது பக்கத்தில் பெரிய தியான மண்டபம் ஒன்று இருக்கிறது. இந்த மண்டபத்தில் உள்ள மேடையில் இருந்துதான் இரமணர் பக்தர்களிடம் பேசிக் கொண்டிருப்பாராம். மேலும் ஆசிரமத்தினுள் இராமானந்தர் மற்றும் இராமகிருஷ்ணரின் சீடரான நிரஞ்சனானந்தர் சமாதிகளும் அமைந்துள்ளன.

மீண்டும் கிரிவலப்பாதை. அடுத்த சிறிது தூரத்தில் யோகி ராம்சுரத்குமாரின் ஆசிரமம் இடதுபுறத்தில் சற்று உள்ளார்ந்து அமைந்திருக்கிறது.

கடந்து வந்த தூரம் 3.5 கிலோமீட்டர் என்ற அறிவிப்பு பலகையுடன் அடுத்து இருப்பது எமலிங்கம். இதுவும் சாலையின் இடதுபுறத்தில் அமந்துள்ளது. எமபயம் நீங்க வேண்டி வணங்குகின்றனர். அதைத் தொடர்ந்து துர்வாச மகரிஷி ஆலயம் உள்ளது.

அதைத் தொடந்து வலதுபுறத்தில் ஆதிபராசக்தி சக்தி பீடம் இருக்கிறது. அடுத்த இரண்டு கிலோமீட்டரில் (கடந்து வந்த தூரம் 5.5 கிலோமீட்டர்) நிருதிலிங்கம் வருகிறது. தோஷங்கள் மற்றும் சாபங்கள் நீங்குவதற்கும், குழந்தை வரம் வேண்டியும் இங்கு வேண்டிச் செல்கின்றனர். அடுத்ததாக வலதுபுறத்தில் நவலிங்க கோவில் ஒன்று உள்ளது.

அடுத்த அரை கிலோமீட்டரில் அண்ணாமலையார் கோவில் ஒன்று வருகிறது. அடுத்து வலது புறத்தில் நித்தியானந்தரின் தியான பீடம் இருக்கிறது. இதுவே அவரின் ஆசிரமுமாக செயல்படுகிறது. நுழைவாயிலில் பக்தர்களுக்காக சுத்திகரிக்கப்பட்ட குளிர்ந்த குடிதண்ணீர் குழாய்கள் அமைத்திருக்கிறார்கள். உள்ளே சென்றால் நித்தியானந்தரின் தியான சத்சங்க வீடியோ காட்சிகளை பெரிய திரையில் வெட்ட வெளியில் ஒளிபரப்பிக் கொண்டிருப்பதைக் காணலாம்.

மீண்டும் கிரிவலப் பாதையில் தொடர்ந்தால் சிறிது தூரத்தில் அடிமுடி மகரிஷி சமாதி அமைந்துள்ளது. அதையும் பார்த்துவிட்டு அங்கிருந்தவரிடம் இந்த மகரிஷியின் பெயர்க் காரணம் கேட்டோம். ஜோதி வடிவமாக திருமாலுக்கும் பிரம்மாவுக்கும் காட்சி தந்த சிவனின் அடிமுடி திருவிளையாடலை தன் தவத்தின் மூலம் உணர்ந்து கொண்டவராம். ஆகவே இவருக்கு அப்பெயர் ஏற்பட்டது எனக் கூறுகின்றனர்.

அடுத்த அரை கிலோமீட்டரில் வருவது வருணலிங்கம். இவரை வேண்டிக் கொண்டால் சர்க்கரை நோய் மற்றும் சிறுநீரக சம்பந்தமான நோய்களிலிருந்து விடுபடலாம் என்று சொல்கின்றனர். அதைத் தொடர்ந்து மகாகாளி சித்தர் பீடமும் ஷீர்டி சாய்பாபாவின் ஆலயமும் இருக்கின்றன.

(மீதி அடுத்த இதழில்)

About The Author

12 Comments

 1. jayashree

  திச் இச் வெர்ய் நிcஎ இன்fஒர்மடிஒன்ச் அபொஉட் தெ டெம்ப்லெ
  கொந் முச் டிமெ நில்ல் இட் டகெ டொ cஒம்ப்லெடெ தெ fஉல்ல் கிரி வலம்
  இச் அல்ல் தெ டெம்ப்லெச் அர்ரொஉன்ட் ஒபென் த்ரொஉக்கொஉட் தெ டய் டிமெ
  ப்லெஅசெ கெல்ப் உச் த்ரொஉக்க் யொஉர் ந்ரிட்டிங்ச்

 2. jegatheswari

  இன் தெ கொவிலில் கிரிவலம் வந்தால் உடனெ கல்யானம் நடக்கும். Vஎன்டுதல் நிரைவெரும். பொந்ர்னமி அன்ட்ரு

 3. SATHIYA-A

  அஙெ டொஇலெட் இல்லஎ குரைவகௌஇல்லது அதிகமகினல் நல்லது

 4. kulasekharan s g

  ஆணந்தமான விஷியம் .ஆனால் ஓர் விஷியம் தனிதனியாக நீங்க லிங்கம் பத்தி ய முக்யம் வனங்கும் முரை பலன் ஆகிய வைகள் பற்றீ விவரமாககவும் எந்த நாளில் வணங்னால் என்னபலன் என்ரு தெரிவித்
  தால் நன்ராய் இருக்கும் வழ்கவழமுடன் குலசேகரன் G.

 5. venkataman

  பௌர்ணமி மற்றும் அமாவாசை பற்றி தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி ஆன்மீகம் மற்றும் அமைதிக்கு கிரிவலம் மிகுந்த பயனுள்ளது.

Comments are closed.