திறன்

எனக்குப் பிடிக்கிறது
முகந்துடைக்கும்
துண்டை நீ
உலர்த்தும் விதம்
ஒவ்வொரு இரவும்
உன் முகத்தை
கழுவிவிட்டு
போகிறாய் நீ
படுப்பதற்கு
நளினமாய்
உலர்த்துவாய்
துவாலையை
வாழ்க்கையைப்போலவே
கண்ணீரில்
நனைந்து ஊறியதால்
பிழிந்து
தோல்விகளெனும்
காயங்களுடன்

எனக்கும் கற்க ஆசை
துண்டால்
துவட்டுவதுபோல
கண்ணீரை உலர வைக்க
காயட்டும்
தோல்விகளையும் உலர்த்த
காயட்டும்
அமைதியாக
அமைதியாக
உன் நளின அசைவுகளிலிருந்து
எனக்குத் தெரியும்
உனக்குப் பிடிக்காது
மற்றவரைத் தொந்தரவு செய்வது
அது ஒரு திறன்

(சொற்கள் தோற்கும்பொழுது – மின்னூலில் இருந்து)

About The Author