தூத் பேடா தலியா

தேவையான பொருட்கள் :

கோதுமை – 100 கிராம்
பால் – ½ லிட்டர்
சர்க்கரை – 250 கிராம்
துருவிய தேங்காய்ப்பூ – 1 கப்
முந்திரிப்பருப்பு – 10
ஏலக்காய் – 4
நெய் – 2 தேக்கரண்டி
உப்பு – ஒரு சிட்டிகை

செய்முறை :

முதலில் கோதுமையை வெறும் வாணலியில் பொன்னிறமாகப் பொரியும்வரை வறுக்க வேண்டும். பின்னர் அதை மிக்சியில் கொறகொறவென்று அரைத்துக் கொள்ளுங்கள்.

தேங்காய்ப்பூவை நெய்யுடன் சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். ஏலக்காயை பொடித்துக் கொள்ளவும்.

இனி, ஒரு பாத்திரத்தில் பாலைக் காய்ச்சி அதனுடன் பொடித்த கோதுமை ரவையைப் போட்டு வேக விடவும். அது வெந்தவுடன் முந்திரியை அரைத்து சேர்க்கவும்.

மட்டான தழலில் கிண்டியவாறு தேங்காய்ப்பூ, ஏலப்பொடி, உப்பு போட்டு ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும். சுவையான தூத் பேடா தலியா ரெடி.

தேவையானால் வில்லைகளாக செய்யலாம். சுவையும், மணமும் அபாரமாக இருக்கும்.

About The Author

1 Comment

  1. rajam

    சென்சிசப்பிட்டுபர்து சொல்லுகிரயென்

Comments are closed.