தேங்காய் சாக்லெட்

தேவையான பொருட்கள்:

தேங்காய் – ஒன்று
பால் – சிறிதளவு
சர்க்கரை இல்லாத கோவா – 200 கிராம்
சர்க்கரை – 500 கிராம்
கொக்கோ பவுடர் – 2 மேசைக்கரண்டி
நெய் – 200 கிராம்

செய்முறை:

தேங்காயைத் துருவி மிருதுவாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு, சிறிது பால் விட்டுச் சர்க்கரை, நெய் கலந்து அடுப்பில் விட்டுக் கிளறுங்கள். சிறிது நேரம் நன்கு கிளறிய பின், அதில் கோவாவை உதிர்த்துப் போடுங்கள். கலவை கெட்டியாகும்பொழுது கொக்கோ பவுடரைக் கலந்து, நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டிப் பரத்தி, துண்டமிடுங்கள்.

சுவையும் சத்தும் கொண்ட தேங்காய் சாக்லெட் தயார்!

About The Author