தேன்குடம்

கீழ்வானம்
இருள் அதன் உருவிலா கரங்களில்
தேன்குடம் ஏந்தியிருக்கிறது
அதன் துளிகள் மரங்களில் பொழிந்துகொண்டிருக்கின்றன
மரங்களிலிருந்து தரையிலும்

துளித்துளியாய்
பெருமழையாய் பொழிகிறது எனது வீட்டிலும்
வீட்டு முற்றத்திலும்
உலகின் எல்லா இடங்களிலும்
என்னுடைய பரவசத்தின் வலியினை அடித்துச் செல்கிறது
துளித்துளியாய்
முழுமையான தேன் இரவு
முடிவுக்கு வந்தது

பூமி விடியலுக்கு நகர்கிறது
இலைகளைத் தனது சுவாசத்தால் சலசலக்கச் செய்து
நம் ஓசையற்ற பாதச்சுவடுகள்
நகர்ந்துகொண்டிருக்கின்றன
எப்போதும் நகர்ந்து செல்லும்
வாழ்க்கைக் காலத்தில்

(மூலம் : பிரதீபா சத்பதி)

About The Author