தோழிக்கு எழுதிய மடல்கள் (3)

அன்புள்ள தோழி !
நலம்! நலமே நாடுகிறேன்!
மடல் தாங்கி வந்த
ஆதரவான சொற்கள்
ஆறுதலாயிருந்தன!!!

வெகு நாட்கள் பிரிந்ததில்லை
உனைவிட்டு!
வெகு தூரமும்தான்!
அதனால்தான் துயரம்
அத்துணையும் அண்டையில்!!!!

விழிகள் வேர்க்கிறது!
துடைத்தெறிய மனமில்லை
ஒருவருக்கும்!!!
கண்களே காணாதவர்க்கு
கண்ணீர் எப்படித் தெரியும்?
சுற்றிலும் சுயநலக்கூட்டம்
சுக்கலாய் உள்ளே நான்!!!

உயிரின் தரையில்
ஒரு கோடி அசைவுகள்!!!
அனைத்தையும் அமைதியாய்
அடைத்து வைத்திருக்கிறேன்
உன்னிடம் பகிர்ந்து கொள்ள!
தீராத பாரத்தோடு
தோள் தேடி அலைகிறேன்!

ஆங்கிலத் திங்களின்
தொடக்கத்தில் உனை சந்திக்கிறேன்!
அதுவரை
உன் நினைவோடும்
நம் நினைவுகளோடும்
நான்!!!!

About The Author