தோழிக்கு எழுதிய மடல்கள் (4)

அன்புள்ள தோழி!

கனவுகள் தருகிறேன்
கற்பனையில் நாம் வாழ,

எண்ணங்கள் தருகிறேன்
எப்போதும் இணைந்திருக்க,

துன்பங்கள் உரைக்கிறேன் – உன்
தோள் சாய்ந்திருக்க,

இன்பங்கள் பகிர்கிறேன்
ஈடில்லா மகிழ்ச்சிக்காக,

ஏக்கங்கள் இயம்புகிறேன்
எப்பொழுதாவது நிறைவேற,

நற்பண்புகள் விவாதிக்கிறேன் – சில
நல்லன செய்வதற்காக,

எப்போதும் நட்போடிருக்க நினைக்கிறேன் – உன்
நல்ல உள்ளத்திற்காக,

இவையெல்லாம்
சுயநலமென சுற்றியுள்ளோர்
உரைத்தால்
உயிரையும் தருகிறேன்!!!
உன் ஆயுள் இரட்டிப்பாக!!!!

About The Author

1 Comment

  1. anandh

    devi…. kavithai pagudhiyil thangaladhu payanam…. thozhikku kadidham yezhudiyadhodu mudindhadha???? thangal prasuram tharpodhu kanavillaye!!!

Comments are closed.