த்ரி இன் ஒன் சூப்பர் – கோதுமை, ராகி தோசைகள்

தேவையானப் பொருட்கள் :

ரவை – இரண்டு கப்

அரிசி மாவு – 1-1/2 கப்

மைதா மாவு – இரண்டு மேசைக் கரண்டி

மிளகு – ஒரு தேக்கரண்டி

சீரகம் – ஒரு தேக்கரண்டி

பெரிய வெங்காயம் – இரண்டு

கறிவேப்பிலை-கொத்துமல்லி – சிறிதளவு

பச்சை மிளகாய் – ஒன்று

தோல் நீக்கிப் பொடியாக நறுக்கிய இஞ்சி – சிறிதளவு

தோலை சீவி துருவிய கேரட் – ஒன்று

உப்பும், தண்ணீரும் – சுவைக்கும் தேவைக்கேற்ப.

செய்முறை :

ரவையை நிறம் மாறாமல் வாணலியில் சூடுபடுத்திக் கொள்ளவும். வறுத்த ரவையை மிளகு மற்றும் மிளகாயுடன் சேர்த்து மிக்சியில் ஒரு முறை அரைத்துக்கொள்ளவும். வெங்காயத்தையும் , கேரட்டையும் துருவி, பொடியாக நறுக்கிய இஞ்சித் துண்டுகளையும் கொத்துமல்லி, கறிவேப்பிலையுடனும் சேர்த்து தேவையான அளவு நீர் சேர்த்து நீராகக் கரைத்துக் கொண்டு ஒரு non-stick தவாவில் அனலை தேவைக்கேற்ப சீராக வைத்துக் கொண்டு ரவை தோசைகளாக வார்க்கவும். சட்னியுடனோ, சிறிய வெங்காய சாம்பாருடனோ தோசையைச் சாப்பிட வாய்க்கு ருசியாக இருக்கும்.

கோதுமை ராகி ரவா தோசைகள்

மேற்கண்டவாறு தயார் செய்த குறிப்பில் அரிசிமாவிற்குப் பதிலாக கோதுமை மாவை சேர்த்து கலந்து கோதுமை ரவா தோசைகளையும் , ராகிமாவை சேர்த்து கலந்து ராகி ரவா தோசைகளையும் தயாரித்து அசத்தலாம்.

குறிப்பு :இந்த முறையில் தயாரித்தால் ரவை தோசைகள் சூப்பராக இருக்கும் .

About The Author