நகைச்சுவைத் துணுக்குகள்

‘இசை’வாக சிரியுங்கள்!

(சங்கீத வித்வானும், நண்பரும்)
"நேத்து என் கச்சேரிக்கு நீங்க வரலே போலிருக்கே…ஏன் சார்?"
"ஸாரி சார்!……..ரசிகர்கள் நொந்துபோய் உட்கார்ந்திருக்கற நிகழ்ச்சிக்கெல்லாம் நான் வர்றதில்லே!"

*****

(சங்கீத வித்வானும், நண்பரும்)
"சுருதிசுத்தம், லயசுத்தம் இதுகள்ல நான் எப்போதுமே க்ளீனா இருப்பேன் சார்!"
"இசை உலகத்தையே க்ளீன் பண்ணிடுவீங்கன்னு சொல்லுங்க!"

*****

(வித்வானின் மனைவியும், பத்திரிகை நிருபரும்)
"இந்த வித்வானோட நான் இருபது வருஷமா குப்பை கொட்டிக்கிட்டு இருக்கேன்!"
"அவர் மேடைல எத்தனை வருஷமா கொட்டறாருங்க?"

******

About The Author

4 Comments

 1. மங்களம் மைந்தன்

  தமிழ்நாட்டுல எல்லாப் பத்திரிகைகளிலும் கலக்கிக்கிட்டு இருக்கற நீங்க, இப்போ இணையதளத்திலும் கலக்க வந்துட்டீங்க போலிருக்கே! ஜமாய்ங்க!
  – மங்களம் மைந்தன், திருவெறும்பூர், தமிழ்நாடு.

 2. கிரிஜா மணாளன்.

  கலக்கறதும், அசத்தறதும் டி.வி. மீடியால ‘அவங்க’ மட்டும்தான் செய்யணுமா என்ன, நாமும் இணையதளத்து ரசிகர்களை கலக்குவோமே!…..நீங்களும் வாங்களேன் பிரதர், சேர்ந்து கலக்குவோம்! – கிரிஜா மணாளன்.

 3. sameera

  அனைவரயும் சிரிகவைகும் நகைசுவை இது

Comments are closed.