நகைச்சுவைத் துணுக்குகள்

டாக்டர் : உங்க கணவருக்கு அமைதியும் ஓய்வும் தேவை. அதுக்குத்தான் தூக்க மாத்திரை கொடுத்திருக்கிறேன்.

மனைவி: சாப்பிட்டதுக்கு பின்னாடி தானே டாக்டர் அவருக்குக் கொடுக்கணும்?

டாக்டர் : மாத்திரை அவருக்கில்லை, உங்களுக்கு !

                                                                          ******

கணவர் : WIFE – க்கு என்ன அர்த்தம் தெரியுமா? – Without Information, Fighting Everytime!

மனைவி: இல்லை டார்லிங் அதற்கு அர்த்தம் With Idiot For Ever

                                                                          ******

மனைவி : நான்  நியூஸ் பேப்பராக இருந்தால்  உங்க கையில நாள் பூரா தவழும் பாக்கியம் கிடைத்திருக்குமே

கணவர் : நான் கூட அப்படித்தான் நினைக்கிறேன். தினமும் புதுசா கிடைக்குமே!

                                                                           ******

கணவர் : இன்னிக்கு சண்டே ! நல்லா என்ஜாய் பண்ணப் போறேன். அதுக்குத்தான் 3 சினிமா டிக்கெட் வாங்கியிருக்கேன் .

மனைவி : எதுக்கு மூணு?

கணவர் : உனக்கும் , உன்னோட அப்பா, அம்மாவுக்கும்.

                                                                          ******

நண்பர் 1 : மனைவியோட பிறந்தநாளை மறக்காம இருக்க சிறந்த வழி என்ன?

நண்பர் 2 : ஒரே ஒரு முறை மறந்திருங்க ! அதுக்கு அப்பறம் மறக்கவே மாட்டீங்க!!.

                                                                         ******

About The Author

12 Comments

 1. mallai thamizhachi

  மனைவியின் பிறந்த நாள்…………… என்னப்பா இது? நான் சத்தம் போட்டு சிரிச்சிட்டேன். நல்ல ஜோக்ஸ்.

 2. Kavitha Prakash

  சிரிக்கத்தானே எழுதினேன். நல்லா சிரிங்க மல்லை தமிழச்சி !.

  உங்க பேரை படிச்சதும் கல்கியோட நாவல்களை இன்னொரு முறை படிக்கத் தோணுது எனக்கு.

 3. renusaa ananth

  பையன்:அப்பா ராமு என்ன அடிச்சுடான் பா…
  அப்பா:டீச்சருட சொன்னீயா???
  பையன்:டீசர் பேர்தாபா ராமு

 4. s. balasundaram

  ரொம்ம்ம்ப நல்ல ஜொக் பிர்த்டய் ஜொக் நான் வாஇவிட்டு சிரிட்தெஅன், நன்ட்ரி

Comments are closed.