நகைச்சுவை கலாட்டா

மென்பொருள் துறையில் போலியாக அனுபவங்களைச் சொல்லி வேலையில் சேருகிறார் ஒருவர்.

முதல் நாள் அலுவலகத்தில்,

புதியவர்: சார், என் கம்ப்யூட்டர் ஹேங் ஆயிருச்சு, என்ன பண்றது?

அருகிலிருப்பவர்: டாஸ்க் மேனேஜரைப் பாருங்க.

உடனே எழுந்த புதியவர், அலுவலகம் முழுவதும் தேடி.. களைத்து, மீண்டும் அருகிலிருப்பவரிடம்,

சார், ஆபிஸ் முழுக்க தேடிவிட்டேன். ப்ராஜ்க்ட், டீம், புரொடக்ஷன் மேனேஜர்கள்தான் இருக்கிறாங்க. டாஸ்க் மேனேஜரைக் காணோமே!

****

காதலர்களுக்கிடையேயான உரையாடல்:

திருமணதிற்கு முன் கடற்கரையில் காத்திருக்கையில்,

காதலன்: அப்பாடா! ஒரு வழியாய் சரியான இடத்திற்கு வந்தாயா? நான் காத்திருந்தது வீண் போகவில்லை.

காதலி : என்னை விட்டு விலகப் போகிறாயா?

காதலன்: இல்லை. நான் அதைப் பற்றி எண்ணியது கூட இல்லை.

காதலி: என்னைக் காதலிக்கிறாயா?

காதலன்: ம்ம்.. ரொம்ப.. ரொம்ப..

காதலி: எப்போதாவது என்னை ஏமாற்றியுள்ளாயா?

காதலன்: இல்லை. ஏன் அதையே எப்போதும் கேட்கிறாய்?

காதலி: என்னை முத்தமிடுவாயா?

காதலன்: வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம்.

காதலி: என்னை அடிப்பாயா?

காதலன்: என்ன விளையாட்டு இது? நான் அப்படிப்பட்டவன் இல்லை

காதலி: உன்னை நான் நம்பலாமா?

காதலன்: நிச்சயமாய்.

காதலி: எனக்காக எப்போதும் சில நிமிடம் செலவழிப்பாய் என நினைக்கிறேன்.

திருமணத்திற்கு பின், காதலருக்கிடையேயான உரையாடல்:

மேலே உள்ள உரையாடலை கீழிருந்து மேலே படிக்கவும்.

****

ஜோ : என்னோட இ-மெயில் id : sarthaar123@yahoo.com, password: qweasd.

நண் : எதுக்கு பாஸ்வோர்டையும் சொல்றே?

ஜோ :அப்பத்தானே என்னோட லெட்டரை என்னுடைய இமெயிலில் நீ படிக்க முடியும்.

****

About The Author

5 Comments

 1. venkata ramani

  பழிக்குப் பழியாய் ஒரு மொக்கெ.

  அந்த கம்ப்யூட்டர் இஞ்சினீயர் போலின்னு எப்படி சொல்லறே?”
  “விண்டோஸை ஓப்பன் பண்ணுன்னு சொன்னா போய் ஜன்னலைத் திறந்துட்டு வறார்.””

 2. rlk

  Tஅமிலர் பெருவிழ!! Pஒஙல் Pஒஙுக! Tஐபிரன்டடு Tஅமிலர் உல்லம் மலர்டடு!! Vஆன,Kஅடல Tஅமிழர் ஊல்லம்!! ஏல்லை ஈல்ல அன்பு கொன்டர்!! ஆன்னையும், Tஅமில் ஆன்னையும் ஓடி வலர்தர்!!-அன்புடனை ,Pஅன்புடனை!! ஆடனைபொல் உஙல் Mஅகிழ்சி Pஒஙுக!Mஅலர்கலைபொல் போது குலுஙுக!! —ஏன்ட்ரென்ட்ரும் அன்புடன்!– ரஜரமன்

 3. n.gunasekaran

  ணான் இது போன்ர நகைசுவை கன்டதில்லை மிகவும் அருமையாக உல்லது.இதை போன்ர நல்ல இன்னும், நிரய கவிதைகலை படைக்க என் மனமார்த வாழ்த்துக்கல்.

 4. Ragothaman

  ஏனக்கு தெரின்தவரை இது ஒரு நிஜமான மொக்கை ஜோக்கு

Comments are closed.