நகைச்சுவை துணுக்ஸ் (10)

"நான் ஆபிஸுக்கு லீவுகேட்டேன், ஆனா லீவு குடுக்கல."

"சரி! அப்புறம் என்ன பண்ணிங்க?"

"அப்புறமென்ன.. பன்றிக் காய்ச்சல்ன்னு சொன்னேன்! ஆபிஸ் பக்கமே வர வேணான்னுட்டாங்க!"

******

மூன்று பேர் இருசக்கர வண்டியில் வந்து கொண்டிருந்தனர். அப்போது போலிஸ்காரர் ஒருவர் வண்டியை வழி மறித்தார். அதற்கு வண்டியில் இருந்த நம்மவர்,

"ஏற்கனவே நாங்க மூணுபேர் போயிக்கிட்டு இருக்கோம். இதுல நீங்க வேற லிஃப்டு கேக்குறீங்களே!"

******

போஸ்ட்மேன் : சார், உங்களுக்கு மணியார்டர் போட்டிருக்காங்க.
‘ஜோக்கர்’ ஜோ : எவன்டா அவன் மணி…? எனக்கு ஆர்டர் போடுறது…?

******

ஜோ : என்னுடைய மொபைல் பில் எவ்வளவு?
கால் சென்டர் பெண் : சார், *123னு டைப் பண்ணி கால் பண்ணினால் உங்களுடைய கரன்ட் (current) பில் எவ்வளவு என்று தெரிந்து கொள்ளலாம்.
ஜோ : ஸ்டுபிட்! என்னோட மொபைல் பில்லைக் கேட்டா, கரண்ட் பில்லைப் பத்தி சொல்றியே!

******

"சார், இரண்டு நாளைக்கு முன்னாடி சம்பந்தரோட சொற்பொழிவு ஒண்ணு கேட்டேன். அவர் உன் போக்கில் போ, உன் வழியில் யோசி, நீ விரும்பியதை செய்.. அப்படின்னார். சரின்னு நானும் டிரை பண்ணினேன், ஆனா வீட்ல என்னை திட்டுறாங்க சார்?"

அப்படி என்ன திட்டினாங்க?

தறுதலை.. யாரு பேச்சையும் கேட்காமப் போகுது பாரு!

About The Author

1 Comment

Comments are closed.