நகைச்சுவை துணுக்ஸ் (12)

நர்ஸ்-1 : நம்ம டாக்டரோட ஞாபகமறதி நோய் குணமான சேதி கேட்டு எல்லோரும் ஷாக் ஆகிட்டாங்க!

நர்ஸ்-2 : எதுக்கு?

நர்ஸ்-1 : அவர் நெஜமாவே டாக்டர் இல்லையாம், வக்கீலாம்!

******

ஒருவர் : என்னோட இராசி, நட்சத்திரம் எல்லாத்தையும் கேட்டுட்டு, வீட்டுக்குள்ள ஜோசியர் போறாரே, எதுக்கு?

மற்றவர் : கொஞ்சம் அவசரப்படாம இருங்க.. பேப்பரைப் படிச்சிட்டு வந்து உங்களுக்கு பலன் சொல்வாரு!

******

ஆள் -1 :ரொம்பக் கஷ்டப்பட்டு வீட்டைக் கட்டிட்டேன், ஆனா மனசுக்குள்ள ரொம்ப பயமா இருக்கு!

ஆள்-2 : எதுக்கு பயம்? கடன் அதிகமாயிடுச்சா?

ஆள் -1 :இல்ல.. நிலம்தான் யாருடையதுன்னு தெரியல!

******

நர்ஸ்: மூணாம் நம்பர் ரூம் பேஷண்ட், ரொம்ப நாள் இங்க இருப்பார்போல தெரியுது
டாக்டர்!

டாக்டர்: எப்படி சொல்ற?

நர்ஸ்: சுவத்துல ஆணியடிச்சு அவரோட போட்டோவை மாட்டிட்டாரே..?

******

About The Author

2 Comments

 1. P.SRIPRIYA

  நினைத்தாலே சிரிக்க வைக்கும் கலக்கலான ஜோக்ஸ் எல்லாமே டாப்பு.
  கார்ட்டூன் ஒவியங்களோடு பிரசுரமானால் இன்னும் சூப்பராக இருக்கும்.
  சிரிக்க வைக்கும் நிலாச்சாரலுக்கு கோடி வந்தனம்.
  பி.ஸ்ரீ ப்ரியா ,நெடுங்காடு.

 2. raamabaskaran

  கார்ட்டூன் ஒவியங்களோடு பிரசுரமானால் இன்னும் சூப்பராக இருக்கும்.

Comments are closed.