நகைச்சுவை துணுக்ஸ் (13)

போலிஸ்: ஏற்கெனவே இரண்டு முறை திருடின வீட்ல போய் ஏன் இன்னைக்கு திரும்பவும் திருடின?
திருடன்: காலண்டர்ல இன்று புதுமுயற்சிகளைத் தவிர்க்கவும்னு போட்டிருந்தது, அதான்!

——–

உங்க கல்யாண ஆல்பத்துல ஒருசிலரோட ஃபோட்டோக்கள் மட்டும் ஏன் கறுப்பு, வெள்ளை படமா இருக்கு?
அவுங்கெல்லாம் மொய் செய்யாம ஏமாத்திட்டுப் போனவங்க.

——–

இருந்தாலும் நம்ம தலைவர் இந்த அளவுக்கு பொய்க்கணக்கு எழுதக்கூடாது.
அப்படி, என்ன எழுதினாரு?
இன்டெர்நெட்டுல சர்ச் இன்ஜினுக்கு டீசல் வாங்கிப்போட்டதா கணக்கு காமிச்சிருக்காரே!

——–

பேஷண்ட்: எமன் ஏன் டாக்டரைத் திட்டிட்டுப் போறான்?
நர்ஸ்: டாக்டர் இன்னைக்கு செய்ய வேண்டிய ஆப்பரேஷனை தள்ளி வச்சிட்டார், அதான்!

——–

தொண்டர் 1: தமிழ் சொற்பொழிவுக்கு முன்னாடி நம்ம தலைவர் மது அருந்துறாரே, எதுக்கு?
தொண்டர் 2: மது அருந்தினால்தான் அவர் பேச்சிலே ‘ழ’ சரியா வருமாம்!

——–

About The Author

4 Comments

  1. janani

    ரொம்ப ரொம்ப நல்லா இருக்குது தோலா

  2. priya

    மிக அருமையாக இருக்கிரது. மிக்க நன்ரி நன்பா.

Comments are closed.