நகைச்சுவை துணுக்ஸ் (2)

எஸ்.ஐ : அந்த கண்டெய்னர்ல ரேஷன் அரிசிதான் கடத்திட்டு வந்தாங்கன்னு எப்படிக் கண்டுபிடிச்சீங்க?
கான்ஸ்டபிள் : தூரத்திலிருந்து வரும்போதே மோசமான நாத்தம் வந்தது சார்!

*****

டாக்டர் : நர்ஸ், ஆபரேசனுக்கு எல்லாம் ரெடி பண்ணியாச்சா?

நர்ஸ் : மாலையெல்லாம் வாங்கியாச்சு… ஊதுவத்தியும் ஏத்திவச்சிட்டேன் டாக்டர்.

*****

ஒருவர் : என் கண்ணெதிரிலேயே கல்யாண வீட்ல செருப்ப அடிச்சிட்டு போய்ட்டான்.

மற்றொருவர் : அது உங்களுதா?

ஒருவர் : இல்ல, நான் எடுத்துட்டு போகலாம்னு பார்த்து வெச்ச செருப்பு!

*****

பிச்சைக்காரன் : ஒரு இருபது ரூபாய் இருந்தா தருமம் பண்ணுங்க சாமி.

நம்மவர் : அது என்னயா இருபது ரூபாய் கணக்கு?

பிச்சைக்காரன் : என் பங்காளிக்கு ஒரு மெயில் அனுப்பணும் சாமி!

*****

ஒருவர் : அவரு போலியான டாக்டருன்னு எப்படி சொல்றீங்க?

நம்மவர் : நாய் துரத்துறது மாதிரி கனவு வருதுன்னேன். அதுக்கு ரெண்டு மூணு கல்லை கையில
வச்சிக்கிட்டு தூங்குங்கன்னு சொல்றார்.

*****

About The Author

2 Comments

  1. sasireka

    மிகவும் நன்றாக உள்ளது,உங்களது படைப்பு தொடரவேண்டும்.

Comments are closed.