நகைச்சுவை துணுக்ஸ் (3)

பெரியவர் : (எல்லா பரிசோதனைகளும் முடிந்ததும் டாக்டரிடம் கேட்டார்) டாக்டர்.. கண்ணாடி
போட்டுக்கிட்ட பின்னாடி என்னால நல்லா படிக்க முடியும்… இல்லையா?

டாக்டர் : இதிலென்ன சந்தேகம்? ரொம்ப நல்லா படிக்க முடியும்!

பெரியவர் : (வருத்தத்துடன்) இவ்வளவு நாளா படிக்கத் தெரியாம இருந்துட்டேனே!

*****

நோயாளி : போன வருசம் எனக்கு ஜொரம் வந்தப்ப குளிக்கவேண்டாம்னு சொல்லிருந்திங்க டாக்டர்.

டாக்டர் : சரி. அதுக்கு இப்ப என்ன?

நோயாளி : இனிமே குளிக்கலாமான்னு கேட்க வந்தேன் டாக்டர்.

*****

தொண்டர் : நம்ம கட்சிக் கூட்டத்துக்கு வர்றவங்க எல்லாம் மூக்குமேல வெரல வக்கிற அளவுக்கு
ஏற்பாடு செஞ்சிருக்கோம் தலைவரே.

தலைவர் : அப்படியா?

தொண்டர் : ஆமா தலைவரே! கூவம் பக்கத்துல இருக்கற திடல்ல மீட்டிங் வச்சிருக்கோம்!

*****

ஆசிரியர் : (இராமாயண வகுப்பில்) ராமன் ஏன் காட்டுக்கு சென்றான் தெரியுமா?

மாணவன் : மூலிகை பெட்ரோல் தேடிச் சென்றான் சார்.

*****

About The Author