நகைச்சுவை துணுக்ஸ் (7)

ஏன் தினமும் சாப்பாட்ட பார்சல்ல வாங்கிட்டுப் போறிங்க?

ஹோட்டல்ல சாப்பிட்டா அல்சர் வரும்ன்னு டாக்டர் சொன்னார். அதான்!

*****

“ஸ்கூல் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம்… காலேஜ் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம்… ஆனா?”

“என்ன ஆனா…?”

“பிளட் டெஸ்ட்ல பிட் அடிக்க முடியுமா?”

“ஆவ்வ்வ்வ்!!”

****

ஒருவர் : உங்க பையன் என்ன பண்றான்?

நம்மவர் : அவன் போலீஸ் பாதுகாப்போட இருக்கான்.

ஒருவர் : அப்படியா! எங்க இருக்கான்?

நம்மவர் : வேலூர் ஜெயில்ல!

****

அவரு ஒரு ஆச்சாரமான பிரம்மச்சாரி.

அப்படியா! அது சரி.. அவரு ஏன் எப்பொழுதும் கையில கட்டை வச்சிக்கிட்டு இருக்கார்.

ஏன்னா, அவரு கட்டைப் பிரம்மச்சாரியாம்! அதான்!

About The Author