நகைச்சுவை துணுக்ஸ் (8)

செய்தி : அகல இரயில்பாதை அமைத்ததில் ஆளும்கட்சி ஊழல்.

தொண்டர்: தலைவரே அகலப்பாதை அமைக்கிறதுல ஊழல் செஞ்சதா எதிர்கட்சிக்காரங்க வழக்கு போட்டிருக்காங்க!

தலைவர்: வழக்குலருந்து தப்பிக்க ஏதாவது ‘குறுக்குப் பாதை’ இருக்கான்னு கண்டுபிடிங்கப்பா!

****

போலிஸ்: எதுக்குடா பிள்ளையார் சிலைய திருடினே?

திருடன்: தொழில முதல்முறையா ஆரம்பிக்கும்போது பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிக்கணும் இல்லையா? அதான் சார்!

****

போலிஸ்: உங்க இருசக்கர வண்டிய காணோம்ன்னு புகார் குடுத்திருந்தீங்க.. இல்லையா? அதோ நிக்குதே.. அதுவா பாருங்க.

நம்மவர்: இல்லைங்க, இது இல்ல.

போலிஸ்: பரவாயில்ல.. அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க. அப்புறம் உங்க மனைவிய காணோம்ன்னு இன்னொரு கம்ப்ளெய்ண்ட் கொடுத்திருந்தீங்க இல்லையா? அதோ அவங்களா பாருங்க?

நம்மவர்: இல்லை! பரவாயில்ல.. நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்!”

About The Author

1 Comment

  1. Dr. S. Subramanian

    The police/nammavar joke sucks! Very demeaning (for women as well as civilized men)

Comments are closed.