நனவாக வேண்டும் கனவு

மனதால் நிமிர்ந்த
மாணிக்க அரண்மனை
நனவாகி முடிசூடி
நாடாள வேண்டும்.

கனவிலே தித்தித்த
கற்கண்டுக் கற்பனை
அனைத்துமே நிஜமாகி
அளவற்ற திரவியம்
ஒச்சமில் வெண்முத்து
ஒளிவீசும் நல்வைரம்
கச்சையணி பேரழகுக்
கன்னியர் கரத்தேந்தி
அரியணை முன்வைத்து
அரம்பையர் போலாட
பரிசாக அணிகலன்
பற்பல வழங்கி நான்

கவிபாடும் புலவர்கள்
கப்பம் சமர்ப்பித்துப்
புவிபுரக்கும் சிற்றரசர்
புடைசூழ வாழ்ந்திட

ஆசைப் பூத்தூவி
அர்ச்சித்து நின்திரு முன்
ஈசா இறைஞ்சுகிறேன்;
இச்சை நிறைவேற்றுவையோ?

About The Author

1 Comment

  1. P.BALAKRISHNAN

    KACHAIYANI KANNIYAR ARAMBAIYAR POL AADA ICHAIPPADUVATAHARKU IKKAVITAHI INNUM PALA NOOTRAANDUKALUKKU MUN EZHTHUTHAP PATTIRUKKA VENDUM. NALLA KANAVU.NANRU!-Arima Elangkannan

Comments are closed.